டாப்ஸி கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் பாத்திரத்தில்
கிரிக்கெட் வீராங்கனையாக டாப்ஸி
நடிகை டாப்ஸி தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.
மித்தாலி ராஜ். 1999-ம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். மகளிர் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவின் சிறந்த வீராங்கனையாக பார்க்கப்படும் இவர் கிரிக்கெட் போட்டியில் 20 ஆண்டுகளைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற பெயரும் எடுத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகை டாப்ஸி மித்தாலி ராஜ் ரோல் ஏற்று நடிக்கிறார். 'சபாஷ் மித்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை 'லம்கே', 'பர்சானியா' மற்றும் 'ராயீஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராகுல் தொலாகியா இயக்கவுள்ளார்.
Comments