பரதநாட்டியத்தில் பூர்ணா
தென்னிந்திய சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் சமீபத்தில் நடித்து வரும் நடிகையான பூர்ணா, கடைசியாக தமிழில் காப்பான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
பூர்ணா 2017ல் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த கொடிவீரன் படத்தில் கிட்டதட்ட வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். அதுவரை அவரை கதா நாயகியாக பார்த்த ரசிகர்களுக்கு, அந்த படத்தில் பூர்ணாவின் கதாபாத்திரம் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது மட்டும் அல்லாமல் பெரிதும் பேசப்பட்டது.
‘ தற்போது பூர்ணா பல படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு மிகவும் பிடித்தது பரதம் தானாம், இந்த ஆசையை பல கலை நிகழ்ச்சிகள், விழாக்களில் ஆடி தீர்த்துக் கொள்கிறார் பூர்ணா. தற்போது ஒரு விழாவில் பரதம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனக்கு நடிப்பை தாண்டி பரதமும் வரும் என்று தனது பரதநாட்டிய ஆடலின் மூலம் நிரூபித்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் எடுக்க பட்ட புகைப்படங்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்ற பல ரசிகர்கள் மற்றும் சினிமாதுறையை சார்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .
Comments