கவுகாத்தியில் காமெடி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி  நேற்று  5/1/2020 மழையால் பாதிக்கப்பட்ட ஆடுகளத்தால் கைவிடப்பட்டது.


அசாம் மாநில கிரிக்கெட் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வரும் கவுஹாத்தி கிரிக்கெட் மைதானத்தில் தான் போட்டி மழையால் கைவிடப்பட்டது.


மைதான நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் பிட்ச் சீரமைப்பாளர் ஆகியோரின் தவறுகளால் தான் மாலைமலர் நீர் பிட்ச்சிற்குள் புகுந்தது என புகார் கூறப்பட்டு உள்ளது.


முதல் டி20 போட்டியில் டாஸ் கூட போடப்பட்டது. இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தது. போட்டி துவங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் தான் கடும் மழை பெய்தது.


மழை பெய்த போது வழக்கம் போல பிட்ச்சை பாதுகாக்க பெரிய பிளாஸ்டிக் உறைகள் கொண்டு பிட்ச் மற்றும் அதை சுற்றி இருந்த பகுதிகள் முழுவதுமாக மூடப்பட்டன.
மழையால் போட்டி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டது. மழை நின்றவுடன் பிட்ச்சை சுற்றி இருக்கும் அவுட் பீல்டில் தேங்கிய நீர் மிக விரைவாக அகற்றப்பட்டது. எனினும், பிட்ச்சில் மழை நீர் புகுந்து பிட்ச்சின் தன்மை மாறி இருந்தது


பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்டும் பிட்ச்சில் நீர் இறங்கியது வியப்பை ஏற்படுத்தியது. பின்னர், பிட்ச்சை காய வைக்கும் முயற்சிகள் வேக, வேகமாக நடந்தது. அதனால், போட்டி மேலும் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.சூப்பர் சாப்பர், வாக்குவம் கிளீனர் போன்றவை மூலம் முயற்சி செய்தும், பிட்ச் காயவில்லை என்பதால் அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர் ஆகியவை மூலம் முயற்சி செய்து காமெடி செய்தனர் ஊழியர்கள். அது கடும் விமர்சனத்தை சந்தித்தது.
 
அசாம் மாநில கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் பிட்ச் சீரமைப்பாளர் மழை வரும் முன்பே அடிப்படை பாதுகாப்பு விஷயங்களில் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவில்லை என பிசிசிஐ கடும் கோபம் அடைந்தது.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,