இரவின் நிழல்
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் நீண்ட நாட்கள் பிறகு அவரே நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படமான ஒத்த செருப்பு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பார்த்திபன் தனது அடுத்த படைப்பை உருவாக்க தயாராகிவிட்டார். அவரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை இயக்குனர் பாரதி ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
”ஒத்த செருப்பு திரைப்படத்தின் மூலம் தமிழக இயக்குனர் வரிசையில் இருந்து உலக இயக்குனர் வரிசைக்கு தன் உயரத்தை உயர்த்திக் கொண்ட என் பாசத்துக்குரிய பார்த்திபன்.. இனிய புத்தாண்டு இன்று தொடங்கும் ” இரவின் நிழல் ” உலக விருதுகள் பல வென்றெடுத்து தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்ப்பாய் நிச்சயம் வாழ்த்துக்கள்.. இவன் கவிதைக்காக உங்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் – அன்புடன் பாரதிராஜா”
என பதிவிட்டு தனது வாழ்த்துக்களையும் படத்தின் டைட்டிலயும் அறிவித்துள்ளார்.
Comments