ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்
நடிகர் ரஜினிகாந்துடன் மேற்கொண்ட காட்டு சாகச பயணம் குறித்து பெருமிதமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பியர் க்ரில்ஸ்.
உலக புகழ்பெற்ற பியர் க்ரில்ஸின் காட்டு பயண சாகசமான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர்.
அ தற்போது நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. காயம் ஏற்படவில்லை என்றும் ஷூட்டிங் நல்லபடியாக நடந்து முடிந்ததாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்துடன் காட்டில் பயணித்தது குறித்த தந்து அனுபவங்களை பியர் க்ரில்ஸ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ”பிரதமர் நரேந்திர மோடியுடன் செய்த பயணத்தை டிவி வரலாற்றிலேயே 3.6 பில்லியன் பேர் பார்த்திருந்தார்கள். எங்களது புதிய தொடருக்கு ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கேப்டன் மார்வெல் புகழ் ப்ரீ லார்சனோடு சாகச பயணம் செய்யவிருக்கிறார் பியர் க்ரில்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments