நடுக்கத்தில் அமெரிக்கா

உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்.... 30 கிமீ தூரத்திற்கு நின்ற மக்கள்... _"சுலைமானியின்.._" ... இறுதிச் சடங்கால் அமெரிக்கா பீதி…உலகிலேயே பெரிய ஊர்வலம்.. 30 கிமீ தூரத்திற்கு நின்ற மக்கள்.. சுலைமானி … இறுதிச்சடங்கு - வீடியோ
டெஹ்ரான்: அமெரிக்காவின் டிரோன் படை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியின் இறுதிச்சடங்கு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த இறுதிச்சடங்கில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர்.


கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய இந்த தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.


இதனால் ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகிறது. இந்த போர் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போராக மாறும் என்றும் கூறுகிறார்கள்.


சுலைமானி
இதையடுத்து நேற்று சுலைமானி உடல் ஈராக்கில் இருந்து ஈரான் கொண்டு வரப்பட்டது. ஈரானில் தலைநகர் டெஹ்ரானில் அவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. வடகிழக்கு நாட்டின் தலைவர்கள், ஈரான், ஈராக்கை சேர்ந்த முக்கிய தலைவர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.


லட்சம் பேர்
அதேபோல் பல லட்சம் பேர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். 15 லட்சத்திற்கும் அதிகமான பேர் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். உலகிலேயே யாருடைய இறுதிச்சடங்கிற்கும் இவ்வளவு கூட்டம் கூடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


மொத்தம் எத்தனை
மொத்தம் 30 கிமீ தூரத்திற்கு இந்த கூட்டம் நீண்டு இருந்தது. இந்த கூட்டம் எவ்வளவு தூரம் இருந்தது என்று வீடியோ வெளியாகி உள்ளது .  இவ்வளவு மக்கள் அந்நாட்டு அரசுக்கு ஆதரவு தருவது, அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது… 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,