சென்னை மாநகராட்சிக்கு நன்றி


தமிழகம் முழுவதும் நேற்று 17.1.2020 காணும் பொங்கல் வழக்கமான உற்சாகத்தோடு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள பொழுது போக்கு மையங்கள், வழிபாட்டு தலங்கள், வண்டலூர் மிருக காட்சி சாலை, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை, பூங்கா பகுதிகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக ஒன்று கூடி காணும் பொங்கலை கொண்டாடினர்.



 



 




ஆனால் நம்ம மக்கள் பெரும்பாலானோர், குப்பைகளை, குப்பை போடும் இடங்களில் போடாமல் ஆங்காங்கு விட்டுச்சென்றுள்ளனர்.வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளும் நாம் நாட்டை வைத்துக்கொள்வதில்லையே


இதுபோன்று குவியும் குப்ப்ைகளை அகற்ற சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், கடும் சிரமப்பட்டனர்.1300 டன் குப்பையில் இது வரை 4500 டன் குப்பை அகற்றப்பட்டதாக தெரியவருகிறது


மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மெரினா கடற்கரையில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுடன் 130 பணியாளர்கள் கூடுதலாகவும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுடன் 30 கூடுதலாகவும் பணியாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,