அமித்ஷா மோடி மோதல்
*மோடி - அமித்ஷா... இருவருக்கும் மத்தியில் முற்றுகிறதா பனிப்போர்?*
மோடி - அமித்ஷாவுக்கு மத்தியில் ஏற்ப்பட்டுள்ள மோதல் காரணமாக நாட்டு மக்கள் பாதிப்படைக்கின்றனர் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பகீர் கிளப்பியுள்ளார்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், மோடி - அமித்ஷா இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளதாக பகீர் கிளப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசியது விரிவாக பினவருமாறு...
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கும் இடையே சில பிரச்சனைகளால் மோதல் நடந்து வருகிறது. இவர்களின் மோதல் காரணமாக நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமித் ஷாவின் ஆட்சியின் கடைசி ஏழு மாதங்களில் நாட்டு மக்கள் தெருக்களில் வந்துள்ளனர்.
ஒருபுறம் அமித் ஷா சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் என கால வரிசை பற்றி பேசுகிறார். ஆனால் மோடி நாட்டில் எந்த என்.ஆர்.சி அமல் செய்யமாட்டோம் என்று கூறுகிறார். தற்போது யார் உண்மையை பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவரும் உள் மோதல்களை கொண்டிருப்பதாகத் தெரிகிறது என பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பரபரப்பையும் கூட்டியுள்ளது.
Comments