பிசு பிசுத்த பாஜக பேரணி

            குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த ஆதரவாக  10 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கட்சி தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவே துவக்கி வைத்தார். அவரே டெல்லியில் வீடு வீடாகப் போய் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்


     இதையடுத்து நாடு முழுவதும் பாஜகவினர் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகின்றனர்.


    சென்னையிலும் இந்த பேரணி இன்று நடந்தது. ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்துகொண்டனர்.. இதில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டணியில் உள்ள அதிமுகவும், பாமகவும் கலந்து கொள்ளாமல் ஷாக் கொடுத்துள்ளனர். ராமதாஸ் கருத்து பாமகவை பொறுத்தவரை குடியுரிமை திருத்த சட்டத்தை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளவில்லை.. .    இது குறித்து அன்புமணி ராமதாஸ் தெளிவுபடுத்தினார்..


"குடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கையும் சேர்க்க வேண்டும். இலங்கையில் 30 வருஷமாக தமிழர்களுக்கு பிரச்சனை இருந்து வருகிறது. தற்போது உள்ள பிரதமர், ஜனாதிபதி எல்லோரும் போர்க்குற்றவாளிகள்... பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது... இதனுடன் இலங்கையையும் சேர்க்கவேண்டும். ஏற்கனவே அகதி முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை தர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்றார்.


                   இப்படிப்பட்ட சூழலில் இன்று நடந்த பாஜக பேரணிக்கு கல்தா கொடுத்து ஷாக் அளித்துள்ளன அதிமுகவும், பாமகவும். இதற்கு சில காரணங்கள் உள்ளன. அடுத்தடுத்து சந்தித்த தேர்தல் தோல்விகள் இதில் முக்கிய காரணம். பாஜக கொண்டு வந்த முத்தலாக் சட்டம் ஆகட்டும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகட்டும்.. எல்லாமே அதிமுகவைத்தான் அதிகம் பதம் பார்த்தன. காரணம் பாஜகவை ஆதரிக்கப் போய் ஒட்டுமொத்த முஸ்லீம்களின் எதிர்ப்பையும் அதிமுக சம்பாதித்து வைத்துள்ளது. படுதோல்வி எப்போது இந்த சட்டத்தை பாஜக கொண்டு வந்ததோ, அது முதலே அதிமுக, பாமக சற்று ஒதுங்கியே உள்ளன. மக்கள் மத்தியில் பாஜக மீது கடும் அதிருப்தி நிலவுவதாலும், முஸ்லீம் ஓட்டு வங்கி முழுமையாக கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாலும் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் போதாதென்று, உள்ளாட்சித் தேர்லில் தோற்றதும் அதிமுகவை அதிர வைத்துள்ளது. இது வரலாறு காணாத தோல்வி. . அன்வர் ராஜா இன்றுவரை இந்த காரணத்தைதான் சொல்லி கொண்டு இருக்கிறார்.. என்னதான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று அன்வர் ராஜாவை அதிமுக கூறினாலும் கூட அதுதான் உண்மை நிலவரமும்கூட.. அதனால்தான் பாமக, அதிமுகவும் அதிர்ந்து போனதுடன், ஒதுங்கியே போய்விட்டது என்று சொல்லலாம்.                                பாஜகவின் பேரணியில் பங்கேற்றால் அது கட்சிக்கும், ஆட்சிக்கும் மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதிமுக நிச்சயம் நினைத்திருக்கலாம்.. அதேபோலதான் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்று டாக்டர் ராமதாசும் உணர்ந்திருக்கலாம். இதன் காரணமாகவே இரு கட்சிகளும் பாஜக பேரணியை முற்றாக புறக்கணித்து ஓரம் கட்டி விட்டன என்று எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ‘


 


                          அதிமுகவும் பாமகவும்  இந்த புறக்கணிப்பின் மூலம், "நாங்கள் பாஜக இழுத்த இழுப்புக்கெல்லாம் போவதில்லை... மக்களையும் மனதில் கொண்டுள்ளோம்" என்றும் மக்களுக்கு மெசேஜ் கொடுத்துளளது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,