மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம்

              குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், உ.பி-யில் இஸ்லாமிய இன படுகொலையை கண்டித்தும் பல்லாவரத்திலிருந்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுமார் 2000த்திற்கும் மேற்பட்டோர் சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக கூறி கையில் தேசிய கொடியை ஏந்தியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் பேரணி சென்றனர்


               சென்னை விமான நிலையம் வரை சென்ற பேரணியை பல்லாவரம் பழைய சந்தை சாலையில் போலீசார் நிறுத்தினர். 


          போலீசார் அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு வந்த போராட்டகாரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் வருகின்றனர். உடன் திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.பின்னர் காவல்துறை நெருக்கடி கொடுத்ததின் விலைவாக முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டு கண்டன ஆர்பாட்டமாக நடைப்பெற்றது.இந்த கண்டன ஆர்பாட்டத்தினை மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர்  தாம்பரம் யாக்கூப் தலைமை வகித்தார்.இதில் மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, பல்லாவரம் தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதி,எழுத்தாளர் மதிமாறன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவ அருள் பிரகாசம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்செய்தியாளர் மு. அமிர்தலிங்கம்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,