கவுதமி கொண்டாடிய புத்தாண்டு
துப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கவுதமி..
நடிகை கவுதமி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர். அவர் தற்போது லைப் அகைன் என்ற தொண்டு நிறுவனம் உருவாக்கி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை ஆற்றி வருகிறார்.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் பேசி மகிழ்ந்து அன்பளிப்பு கொடுத்து புத்தாண்டை தொடங்கி இருக்கிறார் கவுதமி.
எல்லாருக்கும் கஷ்டங்கள் இருக்கிறது. அந்த கஷ்டங்களை மறந்து அனைவரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் இந்த புத்தாண்டை துப்புரவு உங்களுடன் கொண்டாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என்று அவர்களிடையே உரையாடி மகிழ்ந்தார்.
Comments