அல்வா கிண்டி பட்ஜெட் உரைகள் தயாரிப்பு பணி

மத்திய பட்ஜெட் 2020-2021, வரும் பிப்ரவரி 1-ம்தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி பட்ஜெட் உரைகள் தயாரிப்பு பணிகள்  ஜனவரி 20-ம்தேதி தொடங்குகியது.  மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அல்வா கிண்டி, அவற்றை ஊழியர்களுக்கு வழங்கி பட்ஜெட் பணிகளை தொடங்கி வைத்தார்.


நிதித்துறை அமைச்சகம் அமைந்திருக்கும் நார்த் ப்ளாக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதில் நிதியமைச்சர், நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக இந்த அல்வா வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அல்வா கிண்டி விட்டால், பட்ஜெட் பணிகள் தொடங்கி விட்டன என்று அர்த்தம்.


மிகவும் சுவை மிக்க அல்வா எனும் இந்திய இனிப்பு பதார்த்தம், மிகப்பெரிய பாத்திரத்தில் தயாரிக்கப்படுகிறது. இதனை நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் வழங்கினார்.


 

இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பட்ஜெட் தயாரிப்பு மற்றும் ஆவணங்களை அச்சிடும் பணி நார்த் ப்ளாக்கில் 10 நாட்களுக்கு நடைபெறும். இதில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு விதிக்கப்படும்.


பிப்ரவரி 1-ம்தேதி பட்ஜெட் உரை வாசித்து முடித்த பின்னர்தான், நார்த் ப்ளாக்கிலிருந்து அதிகாரிகள், ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பட்ஜெட் ரகசியத்தை காக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களை கவுரவப்படுத்தும் நோக்கிலும், அல்வா கிண்டி வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,