. மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம்


நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தற்போது தமிழகத்திலும் நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வங்கிப் பணிகள், தனியார் பேருந்துகள் முடங்கி உள்ளது.


மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, டெல்லி, குஜராத், மேற்கு வங்கம் என்று அனைத்து மாநிலங்களிலும் இந்த போராட்டம் நடக்கிறது


தமிழகத்திலும் நடந்து வரும் இந்த போராட்டத்தில்  தமிழகம் முழுவதும் இருக்கும் 10 தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி துறைமுக பகுதியில் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கதிதினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன
.


அரசு ஊழியர் சங்கம் மற்றும் தனியார் தொழிற்சங்கங்களை சேர்ந்த 20 கோடி பேர் பங்கேற்று உள்ளனர். இதனால் தமிழகத்தில் வங்கி பணிகள் மொத்தமாக முடங்கி உள்ளது. அரசு சார் நிறுவனங்கள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது போக்குவரத்து பாதிக்கப்படவில்ல


ஆனால் காலை 10 மணிக்கு மேல் ஆட்டோக்கள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழகத்தை சுற்றி எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆதரவால் அரசுபேருந்துகள் நள்ளிரவு 12 மணி முதல் இயங்கவில்லை.


தமிழகத்தில் பேருந்துகள் இயங்கி வருகிறது. ஆனால் கேரளா செல்லும் பேருந்துகள் மட்டும் எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகளும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. 90% கடைகள் திறக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் செல்கிறது. தமிழகம் முழுக்க இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான பேருந்துகள், டெம்போக்கள் ஓடவில்லை.


இந்த போராட்டம் காரணமாக பெரிய அளவில் இழப்புகள் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,