இவரை தெரிந்து கொள்ளுங்கள். /கிச்சன் குயின் அலிஸ் வசந்த்

கிச்சன் குயின் என்ற பெயரில் சமையல் கலை பற்றி யூடியூப் சேனல்  மற்றும் முகநூலில் தனி பக்கம் நடத்தி வருகிறார் அலிஸ் வசந்த். சென்னையில் குடும்பத்தோடு வசித்து வரும் இவரது பூர்வீகம் தூத்துக்குடி  ஆகும். சிறு வயது முதலே சமையலில் ஈடுபாடு கொண்டிருந்த இவருக்கு இவரின் கணவரின் ஆலோசனையின் பேரில் யூடியூபில் சேனல் துவக்கி தான் அறிந்த சமையல் கலையினை மிகவும் எளிதான முறையில் மிகவும் ஆரோக்கியமாக மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகிறார். ஆரோக்கியமாகவும் மிக எளிய முறையில் சமைப்பதை மற்றவர்களுக்கும் சொல்லித்தருவதே தனது நோக்கமாக கொண்டிருக்கும் இவர் தனது சேனலில் தினம் தோறும் புது புது உணவு வகைகளை பதிவு செய்து வருகிறார். குறிப்பாக புதிய திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண்களில் பலர் சமையல் அறியாமல் இருக்கின்றனர் அவர்களுக்கு எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இவரது சமையல் குறிப்புகள் அமைந்துள்ளது. இவரது சமையல் பதிவுகளை கண்டு பல பேச்சிலர் ஆண்களும் சமையலை கற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சைவம் அசைவம் இரண்டுமே இவருக்கு கைவந்த கலையாக உள்ளது இவரது சேனலை தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள் பலர் இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். சமையல் செய்வது மிகப்பெரிய கடினமான வேலை என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தவர்கள் கூட இவரது சமையல் பதிவுகளை கண்டபின்னர் அக்கருத்தை மாற்றிக்கொள்வர்.


இந்த யூ டுயுப் சேனல் சென்று அவரின் சமையல் குறிப்புகளை பார்த்து பயன் பெறுங்கள் 


https://www.youtube.com/channel/UCAcjgf92MvIveHFRG2PlUKA


oru sample video  


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,