இனப்பெருக்க சாதனையில் ஆமை

                  ஈகுவடார் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது, கலபாகோஸ் தீவு. இது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு, அழிந்து வரும் இனமான ‘செலோனாய்டிஸ் கூடன்சிஸ்‘ என்ற ராட்சத ஆமை இனத்தை பெருக்க சுற்றுச்சூழல் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக, அதே இனத்தில் 3 ஆண் ஆமைகளையும், 12 பெண் ஆமைகளையும் தேர்வு செய்தனர். அவற்றில் ஒரு ஆண் ஆமை, 40 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் டியாகோ மிருகக்காட்சி சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘டியாகோ‘ என்ற ஆமை ஆகும். அப்போதே அதன் வயது 60.











கலபாகோஸ் தீவில், 3 ஆண் ஆமைகளையும், 12 பெண் ஆமைகளையும் அடைத்து வைத்து இனப்பெருக்க நிகழ்வை அதிகாரிகள் நடத்தினர். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. தற்போது, அங்கு 2 ஆயிரம் ஆமைகள் நடமாடுகின்றன. அவற்றில் 800 ஆமைகளுக்கு ‘டியாகோ’ ஆமைதான் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, தீவில் உள்ள 40 சதவீத ஆமைகள், டியாகோவின் பிள்ளைகள் ஆவர். இனப்பெருக்க நிகழ்வில், ‘டியாகோ‘ தீவிரமாக பங்கெடுத்து, தனது இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றி விட்டதாக அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். தற்போது, டியாகோவுக்கு 100 வயது ஆகிறது. இனிமேல், கலபாகோஸ் தீவில், ராட்சத ஆமைகள் இயல்பாகவே வளரக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக அதிகாரிகள் கூறினர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,