இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் பொங்கல் விழா

                      இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இன்று (14.01.2020) காலை 10.30 மணிமுதல் பொங்கல் விழா சென்னை மோரை  புதிய கன்னியம்மன் நகரில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
  இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்களின் தலைமையில் நடந்த இந்த பொங்கல் விழாவில் சாமுண்டீஸ்வரி மற்றும் லைலா முன்னிலையில் மாணவி பிரியதர்ஷினி வரவேற்புரையை வழங்கினார். 
                                           இந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகபுதிய கன்னியம்மன் நகர் பொதுநல சங்கத்தின் நிர்வாகிகளான திரு.வெங்கடேசன்,திரு,பாலகுமார்,திரு.இளமாறன்,கண்ணன்    மற்றும் திரு.சிலம்பரசன் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த பொங்கல் விழாவில் 75க்கு மேற்பட்ட குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.                குழந்தைகளுக்கு கோலப்போட்டி,பலூன்கள் உடைத்தல்,கண்ணை கட்டி பொட்டு வைத்தல்,நடனம் என  பலவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.
மேலும் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர்கள் புஷ்பா, மேரி, காயத்ரி, நிவேதா, மேகலா, மகேந்திரவர்மன் மற்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் மெல்வின் மற்றும் தாமஸ்   ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பாக நடத்த உதவி செய்தனர்கள்


செய்தி மற்றும் புகைப்படங்கள்


அல்லா பக்ஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,