ஒலியும் ஒளியும் அன்புள்ளமான்விழியே
ஒலியும் ஒளியும்
அன்புள்ளமான்விழியே
தொடர்
பகுதி (5)
அன்புள்ளமான்விழியே
குழந்தையும்தெய்வமும்படப்பாடல்
தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட், மக்கள் கலைஞர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். அவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் சங்கர். 1965 ல் இரவும்பகலும் என்ற தனது முதல் படத்திலேயே கதாநாயகன் அந்தஸ்த்தைப் பெற்றவர்.
அந்த படத்தின் இயக்குநர் ஜோசப் தளியத் என்பவரால் ஜெய்சங்கர் என்று நாமகரணம் சூட்டப்பட்டார், திரையில் மிடுக்கான தோற்றங்கள் காட்டினாலும் ஜெய்சங்கர் அவர்களின் மனம் மனிதாபிமானத்தால் நிறைந்தது என்பதை பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். எதிரிகளே இல்லாத ஒரே மனிதர் என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. மயிலாப்பூரில் சட்டம் படித்து நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் நாடகங்களில் நடித்து பின்னர் திரைப்படத்துறையில் கால்பதித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.
1965ம் வருடம் செப்டம்பர் 19ந்தேதி வெளியான ஏ.வி.எம்மின் மற்றொரு படம் குழந்தையும் தெய்வமும். ஜமுனாவும் ஜெய்சங்கரும் நடித்திருத்திருக்க, கவிஞர் வாலியின் வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் டி.எம்.எஸ். பி.சுசீலா அவர்களின் தேன்குரலில் டூயட்பாடல்.
பணக்கார கதாநாயகி ஏழை கதாநாயகன் அவர்களின் சந்திப்பு மோதலில் தொடங்கி காதலில் முடிந்து கல்யாணம் செய்து கொண்டு வீட்டோட மாப்பிள்ளையாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான பிறகு மனைவியைப் பிரிந்து செல்லும் கணவனின் வேடம். அதன் பிறகு பிள்ளைகளால் ஒன்றுசேரும் தம்பதிகள் அவர்களின் கதைதான், குழந்தையும்தெய்வமும்.
குட்டிபத்மினி குழந்தை நட்சத்திரமாக இரண்டுவேடங்களில் நடித்திருப்பார். அம்மா அப்பாவை சேர்த்து வைக்க நாகேஷ் உடன் அவர்கள் சேர்ந்து செய்யும் குறும்புகள் ரசிக்கும்படியும் இருக்கும்.
பல பாடல்கள் மனதை நனைக்கும் ரகம் என்றாலும், ‘அன்புள்ள மான்விழியே ‘அன்றைய காதலர்களின் மனதின் ரிங்டோன். காதல் வயப்பட்ட பறவைகள் மிகவும் நேசித்த பாடல் இது .இந்தப் படத்திற்கான விருதுவழங்கும் விழா அப்போது மினிஸ்டர் ஆப் இன்பர்மேஷன் அன்ட் பிராட்காஸ்ட்டிங் ஆக பணியாற்றி இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்றது. இப்படிப்பட்ட அழகான தமிழ்நடிகரா என்று ஜெய் அவர்களைப் பார்த்து பாராட்டினாராம்.
அன்புள்ள மான்விழியே கதாநாயகி ஜமுனாவிற்கு உண்மையிலேயே மான்விழிதான்
"ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும் இரவும் வந்தது நிலவும் வந்தது..!"
---லதாசரவணன்
Comments