இனிய வட்டம் இனி உங்களுடன்

*வட்ட வடிவிலான ஸ்மார்ட் போன்!*


அறிவியல் வளர்ச்சியால் தொழில்நுட்ப சாதனங்கள் வேகமாக மாற்றம் கண்டு வருகின்றன. அதுவும், ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பிறகு, புதிய சேவைகளுடன் வாரந்தோறும் புதிது புதிதாய் வெளியிடப்பட்டு வருகின்றன. சிறிய அளவிலான சாதாரண மொபைல் போன்களுக்கு இருந்த மவுசு, ஸ்மார்ட் போன்களின் புழக்கத்துக்குப் பிறகு பெரிய அளவிலான திரைக்கு மாற்றமாகின. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வக வடிவிலான தொடுதிரையின் வடிவில் இருந்து மடிக்கும் வகையிலான தொடுதிரைகள் என தற்போதுதான் மாற்றம் கண்டு வருகின்றன. எனினும், ஸ்மார்ட் போன்களுக்குள் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) மூலம் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டு வந்தாலும், வெளிப்புறத் தோற்றமான செவ்வக வடிவத்தில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.


இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் "டிடோர்' வட்ட வடிவிலான ஸ்மார்ட் போனை உருவாக்கியுள்ளது. உள்ளங்கையில் அடங்கும் அளவில் உள்ள இந்த புதிய அளவிலான ஸ்மார்ட் போன் பார்ப்பதற்கு பெரிய அளவிலான கைக்கடிகாரம் போல் உள்ளது. இரண்டு சிம் கார்டுகளும், 13 மெகா பிக்சல் முன் பக்க கேமராவும் இந்த வட்டவடிவிலான போனில் உள்ளது. ஆன்ட்ராய்டு 9-இல் இயக்கப்படுகிறது. வட்ட வடிவத்திற்கு ஏற்ற ஆப்களை மாற்றம் செய்யும் பணியில் இந்த நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.


இதில், இரண்டு ஹெட்போன்கள் புகுத்தும் இடங்கள் உள்ளன. இதன் மூலம் ஒரே திரையில் இரண்டு பேர், வீடியோக்களைக் காணலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், நண்பர்களுக்காகவும், அலுவலகத்தினருக்காகவும் தனித்தனியாக மெசேஜ், போன் புக் இடம்பெற்றுள்ளது இதன் சிறப்பம்சமாகும். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மாகாணத்தில் நடைபெற்ற நுகர்வோர் தொழில்நுட்ப சாதனங்களின் சர்வதேச கண்காட்சி 2020-இல் இடம் பெற்ற இந்த வட்ட வடிவிலான ஸ்மார்ட் போன் அனைவரையும் கவர்ந்தது. ஓராண்டில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,