கோலியின் குடிஉரிமை சட்டம் குறித்து கருத்து

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 


கவுகாத்தியில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக விராட் கோலி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது 


 அவரிடம் குடியுரிமைத் திருத்தச்ச ட்டம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்ப அதற்கு அவர்  கூறுகையில், "குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் நான் பொறுப்பற்ற வகையில் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க முடியாது. சிஏஏ குறித்து இருதரப்பு கருத்துகள் நிலவுகின்றன. நான் ஏதாவது கருத்து கூறினால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும். சிஏஏ குறித்து நான் முழுமையான தகவலையும், முழுமையான புரிதலையும் அறிந்து கொள்வது அவசியம். அவ்வாறு இல்லாமல் என்ன நடந்து கொண்டிருப்பதை அறியாமல் பொறுப்பற்ற முறையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது.


நான் ஒன்று சொல்லலாம், மற்றவர்கள் ஒன்று சொல்வார்கள். ஆதலால், முறையான புரிதல் இல்லாமல் ஏதாவது நான் கருத்து தெரிவித்தால் நான் பொறுப்பற்ற முறையில் பேசிவிட்டதாக அமையும்" எனத் தெரிவித்தார்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,