ஷீர்டி சாய்பாபா கோயில் மூடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை


மகாராஷ்டிராவில் ஷீர்டி சாய்பாபா கோயில் மூடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை

 

நீண்டகாலமாகவே ஷீர்டி சாய்பாபாவின் பிறப்பிடம் எது என்பது குறித்த சர்ச்சை இருந்து வரும் நிலையில், பத்ரிதான் சாய்பாபாவின் பிறப்பிடம் என்று மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனா கூறி வருகிறது. 
 

மேலும், பத்ரியின் வளர்ச்சிப் பணிகளுக்காக உத்தவ் தாக்கரே 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இதனால் அதிருப்தியில் உள்ள ஷிர்டி அறக்கட்டளை. உத்தவ் தாக்ரேவின் செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.  
 

அதோடு, ஷீர்டி சாய்பாபாவின் பிறப்பிடம் பத்ரி என்று கூறிய உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நாளை முதல் ஷீர்டி சாய்பாபா கோவிலை மூடி எதிர்ப்புத் தெரிவிக்க கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களிடமிருந்து அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 

ஆனால், இந்த செய்து பொய்யானது என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கோவில் மூடப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 


 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,