புத்தாண்டு கவிதை
இனிய_புத்தாண்டு 2020
(கவிதை )
புத்தாண்டே
இந்த ஆண்டு மட்டும்
இங்கே புதியது இல்லை
..... இந்த நொடி கூட
இங்கே புதிது தான்
.... புதிய வரவான இந்த வருடம் ...
. நொடியில் ஆள கற்றுக்கொடு ...
. அழிவே சொல்லாத
அறிவியல் கொடு....
ஆபாசம் இல்லாத
இணையம் கொடு
.... ஆதரவு கரங்களை
அதிகம் கொடு.... வருமுன் காக்கும்
வசதிகள் கொடு....
எதிர்காலம் சிறக்க
எல்லா வளமும் கொடு
.... மகிழ்விப்போம்
மகிழ்வோம் ..
---மஞ்சுளா யுகேஷ்
Comments