வீடு தேடி ரேஷன் பொருட்கள்,

டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெறகிறது. 11 ம் தேதி வாக்கு எண்ணிக்கை . பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.


 


 ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், 



* பணியின் போது மரணமடையும் துப்புரவு பணியாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். 


 


*வீடு தேடி ரேஷன் பொருட்கள், வலிமையான ஜன்லோக்பால்.


 


*  மூத்த குடிமக்கள் வழிபாட்டுதலங்களுக்கு செல்ல ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.


 


* பெண்கள் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி அளிக்கப்படும்.


 


* ஆங்கிலம், தனிநபர் பயிற்சிக்கு சிறப்பு வகுப்புகள் துவக்கப்படும். 


 


* யமுனை ஆற்றங்கரையோரம் நவீனப்படுத்தப்படும்.


 


* டெல்லி நகரத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.


 


இவ்வாறு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


 


மக்களிடமிருந்து உத்தரவு வந்த பின்னர், யார் முதல்-மந்திரி வேட்பாளர் என்பதை அறிவிப்போம் என அமித்ஷா கூறுகிறார்.


பாஜகவால் யார் முதல்-மந்திரி வேட்பாளர் என அறிவிக்க முடியுமா? அக்கட்சியை சேர்ந்த யாருடனும் விவாதத்தில் ஈடுபட தயாராக உள்ளேன். நாளை பிற்பகல் 1 மணிக்குள் அக்கட்சி முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்காவிட்டால், மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வேன். 


 


இவ்வாறு அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,