நியூசிலாந்துக்கு எதிரான20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி 5-0

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த இரு ஆட்டங்களில் சூப்பர் ஓவர் வரை போராடி வெற்றியை வசப்படுத்தியது. இதனால் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகித்தது.


இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி களமிறங்கவில்லை.


டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.


 


இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.  இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


 


அடுத்து களம் இறங்கிய  நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்றோ ஆகியோர் களமிறங்கினர்.



நியூசிலாந்து அணியின்  மார்டின் கப்தில் 6 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் எல்பிடபிள்யு ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதனையடுத்து காலின் முன்றோ 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் வீசிய ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார்.


 


அடுத்து களம்


20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.


  இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி