திருவிளையாடல்  திரைப்படம்

திருவிளையாடல் (திரைப்படம்)


இன்று சிவராத்திரியை முன்னிட்டு ,சிவபெருமானின் திருவிளையாடல்களை சொல்லும இந்த திரைப்படத்தை  இங்கே காணலாம்

திருவிளையாடல்இயக்கம்ஏ. பி. நாகராஜன்தயாரிப்புஏ. பி. நாகராஜன்
ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்இசைகே. வி. மகாதேவன்நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
நாகேஷ்வெளியீடுசூலை 311965[1]நீளம்4450 மீட்டர்நாடுஇந்தியாமொழிதமிழ்திருவிளையாடல் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் ஏ. பி. நாகராஜன் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறும் நக்கீரர் வேடத்தில் தோன்றினார். இத்திரைப்படம் திருவிளையாடல் புராணம் எனும் புகழ் பெற்ற சைவ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.


திருவிளையாடல் புராணத்தில் மொத்தமுள்ள 64 தொகுப்புகளில் 4 தொகுதிகளை மட்டும் தொகுத்து இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.


நடிகர்கள்


சிவாஜி கணேசன் - இறைவன் சிவபெருமானாகபாடல்கள்


பத்து பாடல்கள் இடம்பெற்ற இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் ஆவார். கவியரசு கண்ணதாசன் எழுதிய இத்திரைப்படத்தின் பாடல்கள் காலத்தால் அழியாதவை.]


சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களுள் இதுவும் ஒன்றாகும்.[ இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்களான ஆர். முத்துராமன்நாகேஷ்டி. எஸ். பாலையாடி. ஆர். மகாலிங்கம் ஆகியோர் கொஞ்ச நேரமே திரையில் தோன்றினாலும் அவர்களது கதாபாத்திரங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தது.[ சினிமா சாட் தனது விமர்சனத்தில் இத்திரைப்படத்திற்கு 5நட்சத்திரங்கள் கொடுத்தது. மேலும் இத்திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத்தூண்டும் திரைப்படம் எனப் பாராட்டியது."தி இந்து பத்திரிக்கைக்கு இயக்குநர் அமீர் அளித்த பேட்டியில் திருவிளையாடல் பக்தித் திரைப்படமாக இருந்தாலும், இதன் இயக்குநர் ஏ. பி. நாகராஜன் இத்திரைப்படத்தை ரசிக்கும்படியாக அமைத்திருப்பார். இதுவரை தமிழில் வெளிவந்துள்ள சிறந்த திரைப்படங்களுள் இதுவும் ஒன்றாகும் என பாராட்டுகிறார்


1965-ம் ஆண்டில் வெளியானத் இத்திரைப்படம் அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக அமைந்தது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சென்னை சாந்தி திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்த இத்திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படமாகும். 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை