ரஜினிக்கு பா ஜ க எதிர்ப்பு


ரஜினிகாந்த் மலிவான அரசியல் செய்கிறார், இது அவரின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எச்சரிக்கை



டெல்லி கலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த்  தனது பேட்டியில்  மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துக்களை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது சொல்லியிருக்கிறார்.  மத்திய அரசினுடைய உளவுத்துறையின் தோல்விதான் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம்.



 



மத்தியில் இருப்பவர்களை இதற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன். உளவுத்துறை அவர்களது வேலையை சரியாகச் செய்யவில்லை. சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. உளவுத்துறை தோல்வியென்றால் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. அதை புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.



 


ரஜினியின் கருத்து பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது பாஜக தரப்பில் இருந்து முதல் முறையாக ஒருவர் இதற்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.சேகர் தனது பேட்டியில், ரஜினி டெல்லி வன்முறையை பார்த்து கவலையில்  அவர் பேசி இருக்கிறார். இதில் அவர் மத்திய அரசையும், உளவுத்துறையையும் விமர்சிப்பது சரியில்லை.


இது திட்டமிடப்பட்ட கலவரமே.அரசுக்கு எதிராக நடந்த சதிச்செயல். இதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ரஜினியின் இந்த விமர்சனம் தவறானது. அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நடுநிலைமை கிடையாது. ஒருசாராருக்கு சார்பாக ரஜினி பேசி இருக்கிறார். யாரையோ சமாதானம் செய்ய வேண்டும் என்று ரஜினி இப்படி பேசி இருக்கிறார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,