தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டமன்றம் நோக்கிய பேரணி

சென்னை
மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, கூட்டமைப்பு சார்பில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற சட்டமன்றம் நோக்கிய பேரணி, இன்று நடைபெற்றது.இதில் முஸ்லிம் லீக் தலைவர் பேரா. காதர்மொய்தீன்,காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவர் பிரின்ஸ் MLA, மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ், CPM  நிர்வாகி கனகராஜ், CPI நிர்வாகி மு.வீரபாண்டியன் ,அபூபக்கர் MLA, திமுக துணைப் பொதுச் செயலாளர் VP.துரைசாமி,மஜக துணைப் பொதுச் செயலாளர்  தைமியா, Spdi தலைவர் நெல்லை முபாரக், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு INTJ தலைவர் பாக்கர் , உள்ளிட்டோர் பேரணியில் முன் வரிசையில் அணிவகுத்தனர.காலை 9 மணியில் இருந்தே போக்குவரத்து ஸ்தம்பிக்க தொடங்கியது.காவல்துறையே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு வளையம் அமைத்தது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக அமைந்தது. 


சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சுற்றிலும் நாலாபுறமும் உள்ள சாலைகளில் மக்கள் ஆர்ப்பரித்து திரண்டனர், பெண்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்து முழக்கங்களை எழுப்பினர்.சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி MLA, பிரின்ஸ் MLA, அபூபக்கர் MLA ஆகியோர் சட்டமன்றத்தில் இருந்து வந்த  சிறிது நேரத்தில் ,கூட்டமைப்பு தலைவர் காஜா மொய்தீன் ஹஜ்ரத் தலைமையில் பேரணி, கலைவாணர் அரங்கில் இருந்து தொடங்கியது.கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மன்சூர் காஸிபி,பஷீர் ஹாஜியார் ஆகியோர் கூட்டத்தை வழிநடத்தினர்.முற்றுகை பேரணிக்கு தொடர்ந்து செல்லாதவாறு  காவல்துறை  15 நிமிடங்களில் தடுத்தும், அங்கேயே சர்வகட்சி தலைவர்களும் உரையாற்றினர்.அப்போது அண்ணாசாலை, கடற்கரை சாலை உட்பட சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நிலை குலைந்தது.பேரணியில் போலீசார் முற்றிலுமாக ஒதுங்கி நின்றனர். அதுபோல் பேரணிக்கு வந்தவர்களும் கண்ணியமாக யாருக்கும் தொந்தரவு செய்யாமல் தேசிய கொடிகளை ஏந்தி முழக்கமிட்டவாறு இருந்தனர்.பேரணியும் , ஆர்ப்பாட்டமும்  தேசிய கீதம் முழங்க , உணர்ச்சி பெருக்கோடு நிறைவடைந்தது.பிறகு  மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது ஹஜ் பயணிகளுக்கான கட்டிடம் கட்ட 15 கோடியும், உலமாக்கள் ஓய்வூதியம் ரூபாய் 1500 லிருந்து  3000 ஆக உயர்த்தப்பட்டதும், உலமாக்கள் ஸ்கூட்டி வாங்க 25 ஆயிரம் மானியம் அளிப்பதும்  என முதல்வர் 110-விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறாரே ?என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்தவர்,  இந்தக் கோரிக்கைகளை மஜக சார்பில் நான் சட்டமன்றத்தில் பேசினேன்.கடந்த வாரம் இதை எழுத்து மூலமாகவும் முதல்வரிடம் நேரில் கொடுத்தேன். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஆனால் தற்போது அரசியலில் "க்ரோனோ" வைரஸ்கள் பரவுகிறது .
அந்த வைரஸ்கள்தான் குடியுரிமை சட்டங்கள். 
அதற்கு நாங்கள் மருந்து கேட்டோம்ஆனால் இனிப்புகளை முதல்வர் தந்திருக்கின்றார். அதை பெற்றுக் கொள்கிறோம்.ஆனால் எங்களை க்ரோனோ வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க மருந்து கேட்டும், அதை அவர் தரவில்லை.எனவே அவர் தந்த இனிப்புகளை கொண்டாட முடியாத மனநிலையில் உள்ளோம். ஆனால் அதை வரவேற்கிறோம்.இன்னும் 24-மணி நேரம் அவகாசம் உள்ளது .நாளையே இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் அல்லது மறுபரீசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். நன்றி பாராட்டுவோம்.வெறுமனே மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் அதை கண்துடைப்பு என்போம் என்று பதிலளித்தார்.பேரணியின் இந்த எழுச்சி தொடருமா? அடுத்த போராட்டம் என்ன? என செய்தியாளர்கள் அடுத்த கேள்விகளை எழுப்பினர்.அதற்கு பதிலளித்தவர், நாங்கள் சட்டமன்ற முற்றுகைக்கு ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்றோம்.. ஆனால் இரண்டரை லட்சம் பேர் வந்ததாக பத்திரிக்கையாளர்களே வியக்கின்றனர்.மக்களின் உணர்வுகளை அரசு  மதிக்க வேண்டும் .தொடர்ந்து பல வடிவ போராட்டங்களை , இதே போல் எல்லா மக்களையும் இணைத்து அமைதி வழியில்  நடத்துவோம். சளைக்க மாட்டோம் என்று பதிலளித்தார்.பின்னர் காவல் துறை அதிகாரிகளையும், பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து நன்றி கூறி விட்டு, முழுமையாக மக்கள் கலைந்த பிறகே, மஜக வினருடன்  அங்கிருந்து புறப்பட்டார்.இது போல் தமிழகம் எங்கும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டங்கள் 10 ஆயிரம், 20 ஆயிரம் , 30 ஆயிரம் என்ற மக்கள் எண்ணிக்கையில் எழுச்சிகரமாக நடைப்பெற்றுள்ளது.தமிழக மக்கள் கம்பீரத்தோடு எழுந்து நிற்கிறார்கள். இந்தியாவே திரும்பி பார்க்கிறது


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி