இ- சிகரெட் நல்லதா கெட்டதா

இ- சிகரெட் நல்லதா கெட்டதா ?


 


 


சென்ற வருடம் செப்டம்பர் மாதம் அதிக அளவில் பேசப்பட்டது.முடிந்தொன்றை மீண்டும் எழுதுவதற்கு காரணம் இ-சிகரெட் பற்றி மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதை தாண்டி அனைவருக்கும் தொழில்நுட்பம் எதையெல்லாம் கற்றுத் தருகிறது என்பதை தெரிவிக்கும் நோக்கமாக....


இ- சிகரெட் அல்லாத சிகரெட்டில் 7000 கெமிக்கல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.ஒவ்வொரு முறையும் பற்ற வைத்து உறிஞ்சும் போது அத்தனை கெமிக்கல்களும் உடலில் தங்கிக் கொள்வதன் விளைவாக புற்றுநோய் வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.


மிகமுக்கிய கெமிக்கலாக நிகோடின் 7000 கெமிக்கல்களுள் ஒன்றாக இருப்பதால் தான் ஒருமுறை புகைத்து பழகிய பழக்கம் மறுமுறை புகைக்க தூண்டுகிறது.
இந்த நிகோடின் இரத்தத்தின் வழியாக புத்துணர்ச்சியை தருகிறது என்கிறார்கள்.


ஒவ்வொரு வருடமும் பத்து லட்சம் பேர் புகைபிடிப்பதால் உயிர் இழப்பதாக ஆய்வுகள் சொல்லுகிறது.சிகரெட் பிடிப்பதில் முதல் இடம் சைனா இரண்டாம் இடம் இந்தியாவாக இருப்பது தான் காரணம் மக்கள் தொகை பெருக்கம்.


சிகரெட் பிடிப்பவர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை அருகில் இருப்பவர்களுக்கும் அதீத பாதிப்பை உண்டாக்கிறது.ஒரு ஆணின் இச்செயலில் அதிகமாக பாதிப்பிற்கு உள்ளாவது மனைவி மற்றும் குழந்தைகள் என்பதை உணர்ந்து வாழுங்கள்.


இ- சிகரெட் பற்றி பார்ப்போம்...


தற்போது இந்தியாவிலும் தமிழகத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது இ- சிகரெட்.சைனாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.இ-சிகரெட் இந்தியாவில் பயன்படுத்தினால் ஒரு லட்சம் அபராதம் மற்றும் ஒரு வருடம் சிறை தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அரசாங்கம்.


இ-சிகரெட் என்றால் என்ன ? electronic cigarette என்று பொருள்படும்.16 வருஷத்துக்கு முன்னதாகவே இது பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.அதாவது 2003ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இ-சிகரெட் பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் உள்ளே நிகோடின் மற்றும் புரோபைலீன் கிளைக்கால் கொண்ட திரவம் அதை எரியூட்டுகிறது.வேப்பிங் எனப்படும் நிகோடின், நீர் கரைகின்ற  நீராவியை உள்ளிழுப்பதன் விளைவாக அதிக பாதிப்பை நம் உடல் சந்திக்க தயாராகிறது.ஆகவே இதன் செயல்பாடுகளை பார்க்கையில் சிகரெட் பிடிக்க நினைத்தால் இதன் நுனியை வாயில் வைத்து உறிஞ்சினால் போதும் திரவத்தின் வழியாக நிகோடின் எரியூட்டப்படுகிறது.


இதன் கண்டுபிடிப்பாளர்கள் கூறுகையில் சாதாரணமான சிகரெட்டில் மற்ற அனைத்து கெமிக்கல்களும் உடலினுள் செல்லும் ஆனால் இ-சிகரெட்டில் நிகோடின் மட்டுமே உடலினுள் செல்லும் என்கிறார்கள்.இ-சிகரெட் பேட்டரிகளை அவ்வப்போது ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்கிறார்கள்.


அமெரிக்காவில் அதிகம் பயன்பாட்டில் உள்ளதாகவும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் வயது 19 வயதை உள்ளடங்கியே இருப்பதாகவும் கூறப்படுகிறது.உயிர்பழியும் ஏற்படுகிறது என்கிறார்கள்.


கழுதை தேஞ்சு கட்ட எறும்பா மாறுனா கதை தான் இ-சிகரெட்.
சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை மாற்றுவதற்கான வழியாக இல்லாமல் இ-சிகரெட் அதிகரிப்பதற்கான வழியாக உள்ளது.மனக்கட்டுபாட்டு மற்றும் முறையான மருத்துவ ஆலோசனை தான் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட உதவும்.


- கீர்த்தனா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,