வரம்பியம் ஊராட்சி விட்டுக்கட்டி - தானந்தாங்கி 4கிமீட்டர் சாலை சீரமைக்க சர்வே எடுக்கும் பணி

திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் ஊராட்சி விட்டுக்கட்டி - தானந்தாங்கி 4கிமீட்டர் சாலை சீரமைக்க சர்வே எடுக்கும் பணி நடைபெற்றது.


 


 



திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் ஊராட்சியில் விட்டுக்கட்டி துவங்கி தானந்தாங்கி வரை சுமார் 4 கிலோமீட்டர் சாலை குண்டும் குழியுமான சாலையாக மாறி   இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .இந்த வழியாக மினி பேருந்துகள் இயங்கிவந்தது சாலை மோசமான தால் பேருந்துகள் இந்த வழியாக சென்று வருவதில்லை அதேபோல் மாணவர்கள் குண்டும் குழியுமான சாலைகளில் சென்று வர இயலாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி கோரிக்கை விடுத்தார்.



 


இதையடுத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் , ஒன்றிய பொறியாளர் ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் விட்டுக்கட்டி - தானந்தாங்கி சாலை அமைக்க திட்டமதிப்பீடு செய்வதற்கான சர்வே எடுக்கும் பணி துவங்கியது. இதில் ஊராட்சித் தலைவர் முருகானந்தம், துணைத்தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்


 


 


. செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,