டெல்லி சட்டசபை தேர்தலில் 5 மணி நிலவரப்படி 44.52 சதவீத வாக்குகள்
டெல்லி சட்டசபை தேர்தலில் 5 மணி நிலவரப்படி 44.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்
.
. டெல்லியில் காலை 10 மணி நிலவரப்படி 4.33 சதவீத வாக்குப்பதிவாகி இருந்தது.
இதன்பின் காலை 11 மணி நிலவரப்படி 6.96 சதவீத வாக்குகளும், 12 மணி நிலவரப்படி 15.68 சதவீத வாக்குகளும் பதிவாகின. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.6 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மந்தகதியில் வாக்கு பதிவு நடந்து வந்த நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 19.37% வாக்குகள் பதிவாகியிருந்தன. இதன்பின் மதியம் 2 மணியளவில் 28.14 சதவீத வாக்குகள் பதிவாகின.
டெல்லி சட்டசபை தேர்தலில் 3 மணி நிலவரப்படி 30.18 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தொடர்ந்து நடந்த வாக்கு பதிவில் விறுவிறுப்பு கூடியது. இதனால் 4 ம
Comments