திருத்துறைப்பூண்டி எல்ஐசி ஊழியர்கள் மற்றும் முகவர்கள் 50க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில்

எல்ஐசி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ள மத்திய அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டி எல்ஐசி ஊழியர்கள் மற்றும் முகவர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒரு மணி நேர வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 மத்திய அரசு தற்போது நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக   அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி எல்ஐசி ஊழியர்கள் இன்று ஒரு மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் எல்ஐசி முகவர்களும் ஒன்றிணைந்து 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க முடிவு செய்ததை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இதனை ஏற்காவிட்டால் மிகப்பெரிய அளவில் ஊழியர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர் .


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி