திருத்துறைப்பூண்டி அருகே தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணி

திருத்துறைப்பூண்டி அருகே தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தில் அனைத்து ஜமாஅத்  மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகம்  பகுதியிலிருந்து பேரணியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பள்ளிவாசல் வீதி வரை சென்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேண்டாம், சி ஏ வேண்டாம் என்ஆர் சி என முழக்கமிட்டனர் மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் வலியுறுத்தினர். பேரணியின்போது 500க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர் 


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


படங்கள். மு. அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்