ஆம் ஆத்மி 52 இடங்களிலும், பா.ஜ.க. 18 இடங்களிலும் முன்னிலை

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியுடன் நடைபெற்று முடிந்தது.


இந்த தேர்தலில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. 

 

, டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.  முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.  இவற்றில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்தது.

 

டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை.  இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி காலை 9 மணி நிலவரப்படி 52 இடங்களில் முன்னிலையில் இருந்தது.  பா.ஜ.க. 18 இடங்களில் முன்னிலை வகித்தது.  இதனால் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை.

 

, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆம் ஆத்மி 52 இடங்களிலும், பா.ஜ.க. 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.  அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது.  இதனால் 3வது முறையாக அக்கட்சி ஆட்சியை பிடிக்க கூடிய சூழல் காணப்படுகிறது.  இது அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளிடையே மகிழ்ச்சி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்