ரஜினிகாந்துக்கு விசாரணை ஆணையம் சம்மன்

 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் ரஜினிகாந்துக்கு விசாரணை ஆணையம் சம்மன்


 


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.இதுதொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையம் 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.


 


 


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து  பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நடிகர்  ரஜினிகாந்த் ஆறுதல் கூறிய  பின்னர்  நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது ‘தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,