நலத்திட்ட பணிகளுக்கு தொடர்ந்து தடையாக கெஜ்ரிவால்

                       70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 8ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  தேர்தல் முடிவுகள் வருகிற பிப்ரவரி 11ந்தேதி வெளியிடப்படும்.

 

தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  டெல்லியில் கார்கர்டூமா பகுதியில் சி.பி.டி. மைதானத்தில் பேரணி ஒன்றில் பிரதமர் மோடி இன்று 3/2/2020கலந்து கொண்டார்.  அவர் கூட்டத்தின் முன் பேசும்பொழுது, டெல்லி மக்களின் வாக்கு நாட்டில் மாற்றம் ஏற்பட ஆதரவளித்தது.  டெல்லி சட்டசபை தேர்தலில் அவர்கள் அளிக்கவுள்ள வாக்கும் டெல்லியில் மாற்றம் ஏற்படுத்தி நவீனப்படுத்தும்.  இதனால் பாதுகாப்பு உருவாகும்.  இங்கு வசித்து வரும் மக்கள், தங்களது வாழ்க்கையை எளிதில் வாழ வழிவகை ஏற்படும் என கூறினார்.

 

டெல்லியில் ஆளும் அரசானது, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை இங்கு அமல்படுத்தவில்லை.  அவர்கள் அரசாட்சியில் இருக்கும்வரை நலத்திட்ட பணிகளுக்கு தொடர்ந்து தடையாக இருந்திடுவார்கள்.  அரசியல் விளையாட்டு தவிர அவர்களுக்கு எதுவும் தெரியாது என பேசினார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,