இவரை தெரிந்து கொள்ளுங்கள் பெண்களுக்கு ஒரு முன் உதாரணம் ஜெயந்தி.

 


 


இவரை தெரிந்து கொள்ளுங்கள்


பெண்களுக்கு ஒரு முன் உதாரணம் ஜெயந்தி.


 


 



      பெண்களுக்கு ஓர் முன் உதாரணமான ஜெயந்தி அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்... 


நெய்வேலியில் பிறந்த இவரின் வாழ்க்கை இன்று அனைவராலும் வியக்கத்தக்க வகையில்  இருப்பதற்கு காரணம் கடின உழைப்பு.பல மேதைகள் பலவாறு உழைப்பைப் பற்றி சொல்லியிருந்தாலும்
டார்னர் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கடக்கும் வாக்கியம்


"கடுமையான உழைப்பைத் தவிர, வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை" என்பார்.


அதுபோலவே ஒரு பெண்ணின் உழைப்பின் சுவாரஸ்யம் எத்தனை அனுபவங்களை பாடங்களை நமக்கு கற்பிக்கிறது என்று பார்ப்போம்.
தனது பள்ளிப்பருவத்தில் தொடங்கி தற்போது வரை ஒரு சிறந்த கைப்பந்து வீராங்கனையாக திகழும் இவர் National Player ஆகவும் இருந்திருக்கிறார்.


விளையாட்டு துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்ததால்" உடற்பயிற்சி மையம்" வைக்க முடிவு செய்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து (1997-2000) மூன்று வருடங்களாக "Neyveli health center" என்ற பெயரில்
"உடற்பயிற்சி மையம்"(Gym)நடத்தி வந்துள்ளார்.


குடும்பச் சூழ்நிலை காரணமாக தனது உடற்பயிற்சி மையத்தை மூடி விட அடுத்தக் கட்டமாக சிறு வயதில் இருந்தே வரைவதில் ஆர்வம் கொண்டவராக இருந்த காரணத்தால் வரையத் தொடங்கியுள்ளார்.அவை பல ஓவியக் கண்காட்சியில் விற்பனையும் செய்யப்பட்டது Embossing செய்யும் கலையும் சிறு வயதிலே கற்றுத் தேர்ந்து இருக்கிறார்.


அதற்கு அடுத்ததாக திருமணமாகி வடக்கு பக்கம் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் அமைய அங்குள்ள இராணுவப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு embossing பற்றிக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
 அதே சமயத்தில் அங்கு நடத்திய
இராணுவக் கண்காட்சியில் தனது embossing வேலைப்பாடுகள் நிறைந்த 50 ஓவியத்தை கண்காட்சியில் அரங்கேற்றம் செய்து அதற்கு பரிசும் பெற்றுள்ளார்.


இப்படியாக ஆரம்பித்த இவரது வாழ்க்கை தெற்கு பக்கமாக தனது சொந்த ஊரான நெய்வேலி வரும் போதெல்லாம் நெய்வேலியில் அமைந்துள்ள "சினேகா சிறப்பு பள்ளி"யில் உள்ளச் சிறப்புக் குழந்தைகளுக்கு (special children's) தன்னால் இயன்றயளவு உதவி செய்து வந்துள்ளார்.
 2014 ல் சொந்த ஊருக்கு திரும்பிய இவர் தனது உடற்பயிற்சி மையத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்து ஆரம்பித்து விடுகிறார். அதனுடன் தனது ஓவிய கலைக்காக Gallery ஒன்றை நிறுவி 
நெய்வேலியில் "JV FITNESS STUDIO" மற்றும் "JV art gallery" நடத்தி வருகிறார்.சமீப காலங்களாக உடற்பயிற்சி மையங்களில் தரும் புரோட்டீன் பவுடரால் ஏற்படும் விளைவு பற்றி அறிவோம் அதைத் தொடர்ந்து இவருடன் பேசுகையில் 
மற்ற உடற்பயிற்சி மையத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவரது முறை முற்றிலும் மாறுப்பட்டவையாக இருந்தது.இயந்திரங்களினால் செய்யக்கூடிய உடற்பயிற்சியை குறைத்துக் கொண்டு floor excercise அதிக அளவில் தரப்படுகிறது.புரோட்டீன் பவுடர் என்று எதுவும் தரப்படவில்லை.வாரம் இருமுறை ZUMBA வகுப்பும் நடத்தி வருகிறார்.இதில் முக்கியமாக சொல்ல வேண்டியவை 1997 - ல்  பெண்களுக்காக  அமைக்கப்பட்ட உடற்பயிற்சி மையம் என்பது குறிப்பிடத்தக்கது.


உடற்பயிற்சி செய்வதனால்  ஏற்படும் நன்மைகள் என்னவென்று அவரது கூறுகையில்


*மன அழுத்தத்தை குறைத்து அமைதியான மனநிலையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும்.
*உடல் எடையைக் குறைக்க உதவும்
*உறுதியான எலும்புகளுக்கு உடற்பயிற்சி முக்கியம்
*பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை குணப்படுத்தப் படுகிறது.
*கர்ப்பப்பை கட்டிகள் சரியாகிறது 
*உடற்பயிற்சி செய்யும் உடலின் அனைத்து செல்களும் இயக்கம் கொள்ளும்
*உடலின் கழிவை நீக்க உடற்பயிற்சி பெரிய அளவில் உதவும்
*புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடற்பயிற்சி மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.
*Mental disorders சம்பந்தப்பட்ட அனைத்தும் உடற்பயிற்சியால் சரி செய்யமுடியும்.
*சருமப் பாதுக்காப்பிற்கும் வழிவகுக்கும்.
*தூக்கத்தை தூண்டும் 
*நாளின் முடிவும் தொடக்கமும் உடற்பயிற்சியால் புத்துணர்வு பெறும் என்கிறார் ஜெயந்தி.
"உடம்பும் உயிருமாம் முப்பது முதலே"என்பதற்கிணங்க உடற்பயிற்சி என்பது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக உள்ளது.


இதைத் தொடர்ந்து 2015ல் "let's do" என்ற டிரஸ்ட் ஒன்றை நிறுவி 
*Health awareness
*education supports for rural people
*Women's skilled program
*அன்னைத் தெரசா சிறப்புப் பள்ளிக்கான உதவி
*சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள 150 சேரி குழந்தைகளுக்கான கல்விக்கான உதவி போன்ற பல குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்று வைத்து இருக்கிறார்."அன்பு எப்போதும் அதன் குணத்தை காட்டிக் கொண்டே இருக்கும் என்பது போல தன்னைச் சுற்றி எப்போதும் அன்புக் கூட்டத்தை வைத்துக்கொண்டே இருக்கும் ஜெயந்தி அவர்கள் பெண்களுக்கு ஒரு முன் உதாரணம்.


வாங்கிய விருதுகள்
*social protection வழங்கிய "Best Organization award"
*Asian Fitness center வழங்கிய " Physical Fitness Trainer course"
*JCI Neyveli வழங்கிய "Jaycee Udayama Rathna Puraskar"
*தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் வழங்கிய "சமூக ஆர்வலர் விருது"
*Army Association வழங்கிய "Best women award"
*மலேசியாவில் நடந்த world human rights day  வில் வழங்கிய international conference & Spt - international peace award 
*Best organization award for "let's do trust"
இந்த விருதுகள் அனைத்து உழைக்கும் மகளிருக்கு சமர்ப்பணம் என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.
ஆகவே,
இன்றைய காலகட்டத்தில் பெண்களின் வளர்ச்சி விகிதம் சாதாரணமாக ஆகிவிட்டது என்றாலும் ஒரு பெண் தனது 1990 களில் இப்படியான முயற்சி செய்து இருப்பது  பாராட்டுக்கு உரியது.
இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
குடும்பம் சமூகம் என்ற கட்டமைப்பை தாண்டி பெண் தனக்கான வாழ்க்கை வாழும் போது அவர்கள் வாழ்க்கையை ஜெயித்து விடுகிறார்கள்.


மேரி கியூரி ,ரோசா பார்க்ஸ்,மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட் ,வங்காரி மாத்தாய்,ரேச்சல் கார்சன் போன்ற பெண்கள் தங்களது திறமைகள் மூலமாக போர் குணங்கள் வாயிலாக இன்று உலகமே பேசக் கூடிய அளவில் வந்துள்ளார்கள்.ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்கான வாழ்க்கையை வாழ விரும்பும் போது அவர்களின் பலம் பலமடங்கு அதிகரிக்கிறது.ஆகவே பெண்களே உங்களுக்கான காலம் உங்களின் கரங்களில் தான் மீண்டு எழுந்து வாருங்கள்.நல்லதொரு சமூகத்தை உருவாக்குவோம்.


- கீர்த்தனா


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி