இப்படியா தாவுது
மதுரை முத்துவும், ஆதவனும்.சன் டிவியிலிருந்து அப்படியே அலேக்காக ஜம்ப் ஆகி விஜய் டிவிக்கு தாவினது காமடிப் பிரியர்களுக்கு ஹேப்பிதான் என்றாலும் கூட அதுக்காக இப்படியாப்பா திடீர்னு தாவுவீகன்னு ஆச்சரியம் அனைவருக்கும் ..
மதுரை முத்துவும், கூடவே ஆதவனும் சேர்ந்து சில புரோகிராம்களை சன் டிவியில் தொடர்ந்து செய்து வந்தனர். அதேபோல தேவதர்ஷினியுடன் இணைந்து ஒரு புரிகிராமை மதுரை முத்து கொடுத்தார். இதெல்லாம் இப்போது நின்று போய் விட்டன. இந்த நிலையில்தான் தற்போது தாய்க் கழகத்திற்கே திரும்பி வந்துள்ளார் மதுரை முத்து. கூடவே ஆதவனையும் அள்ளிக் கொண்டு வந்து விட்டார். ஈரோடு மகேஷும் இவர்களுடன் இணைய பிறகென்ன காமெடி கலாட்டாதான்.
இந்த ரம்யா பாண்டியன் வேற இவர்களுடன். கூடவே வம்புக்கார வனிதாவும். இந்தக்கூடடணி இணைவது கலக்கப் போவது யாரு சீசன் 9. சும்மாவே ஆதவனும், மதுரை முத்துவும் சேர்ந்து டபுள் மீனிங்கில் கலகலப்பாக்குவார்கள்.. இப்ப ரம்யா பாண்டியன் வேற இணைந்துள்ளார்.
Comments