இந்த 9 மால்வேர் அப்-களை டெலீட் செய்யுங்க

உங்கள் ஸ்மார்ட்போனில் கீழே குறிப்பிட்டுள்ள 9 அப்-களில் ஏதேனும் ஒரு அப் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தாலும், நீங்கள் பெரிய ஆபத்தில் உள்ளீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.


உடனே இந்த 9 மால்வேர் அப்-களை டெலீட் செய்து, உங்கள் கூகிள் மற்றும் பேஸ்புக் அக்கௌன்ட் ஹேக் ஆகாமல் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்


 கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த மால்வேர் பயன்பாட்டை, இதுவரை சுமார் 4,70,000 பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்று சைபர் செக்யூரிட்டியில் நிபுணத்துவம் பெற்ற ஜப்பானிய நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது ஸ்மார்ட்போனின் செயல்திறன் மேம்பாட்டை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் டூல் அப்களாக இந்த மால்வேர் அப்கள் செயல்படுகின்றன. சூப்பர் கிளீன் டூல் மூலம் ஆபத்து ஸ்மார்ட்போன் பெர்ஃபார்மன்ஸ் ஆப்டிமைஸிங் டூல் மற்றும் சூப்பர் கிளீன் டூல்-களாக செயல்படும் இந்த 9 மால்வேர் அப்களும், உண்மையில், பயனர்களின் கூகிள் மற்றும் பேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்கிறதென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


 போலி அப்ஸ் அதுமட்டுமின்றி அந்த பயனர்களின் கணக்குகளுக்கு மோசடி அணுகலைக் கொண்டிருக்கும் நம்பகமற்ற விளம்பரம் மற்றும் பல மால்வேர் அப்களுக்கான இன்ஸ்டால் லிங்க்-களையும் வழங்குகிறது என்பது தெரியவந்துள்ளது. இது போன்ற போலி அப்ஸ்களால் பெரிய ஆபத்தில் சிக்கும் பயனர்கள். பயனர்களை இவர்கள் குறிவைக்கும் உத்தி பிளே ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்டு பயனர்களை இவர்கள் குறிவைக்கும் உத்தி, மிகவும் தீங்கு விளைவிக்கும் மால்வேர் செயலிகளுக்கு "ஸ்பீட் க்ளீன்" அல்லது "சூப்பர் க்ளீன்" போன்ற நம்பகமான பெயர்களைக் கொடுத்து, அவர்களின் வலையில் சிக்க வைத்துள்ளனர். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தேவையில்லாத பைல்களை சுத்தம் செய்வதன் மூலம் செயல்திறனை மேம்படுத்த வேண்டிய இந்த செயலிகள் உங்களை ஹேக் செய்கின்றன.


 


3000 வகை தீம்பொருளுக்கான 9 பயன்பாடுகள் இந்த பணியைச் செய்வதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட 9 பயன்பாடுகள் பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் சுமார் 3000 வகை தீம்பொருளைப் பதிவிறக்கம் செய்வதற்கு வழிவகுக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் கூகிள் மற்றும் பேஸ்புக் கணக்குகளை அணுகி மோசடி விளம்பரங்களை வழங்கி, கூகிள் ஆட்மொப் (AdMob) அல்லது பேஸ்புக் ஆடியன்ஸ் நெட்வொர்க் போன்ற முறையான தளங்கள் மூலம் விளம்பரங்களில் கிளிக்குகளை உருவகப்படுத்துகிறது.


 


 கூகிள் நிறுவனம் தனது Google Play Store பயனர்களின் பாதுகாப்பிற்காக Play Protect பாதுகாப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த பிளே ப்ரொடெக்ட் அம்சத்தைப் பயனர்கள் டிசேபிள் செய்து வைப்பதினால் இது போன்ற மால்வேர் அப் மற்றும் போலி அப்களின் வலையில் பயனர்கள் எளிதில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த 9 அப்ஸ்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ளதா என்று செக் செய்யுங்கள்


 9 மால்வேர் அப்ஸ்கள்


 Shoot Clean-Junk Cleaner


,Phone Booster,


CPU அப், Cooler com.


boost.cpu.


shootcleaner பேக்கேஜ்


Super Clean Lite- Booster


, Clean&CPU Cooler அப்,


om.boost.superclean.cpucool.lite


Super Clean-Phone Booster,


Junk Cleaner&CPU Cooler அப், com.booster.supercleaner


 


Quick Games-H5 Game Center அப், com.h5games.center.quickgames


 


 


 Rocket Cleaner அப், com.party.rocketcleaner


 


 


Rocket Cleaner Lite அப், com.party.rocketcleaner.lite


speed Clean-Phone Booster,Junk Cleaner&App Manager அப், com.party.speedclean  LinkWorldVPN அப், com.linkworld.fast.free.vpn


 


 H5 gamebox அப், com.games.h5gamebox


 இந்த மால்வேர் பயன்பாடுகள் கூகிள் பிளே ஸ்டோரில், இவர்களின் பயன்பாடுகளைப் பயனர்கள் நம்பி பதிவிறக்கம் செய்யவேண்டும் என்பதற்காக மற்றவர்களைப் போல் போலி அக்கௌன்டில் இருந்து, போலி கருத்துகள் மற்றும் மதிப்பீடுகளை இடுகையில் பதிவிட்டு பயனர்களுக்குப் போலி நம்பிக்கையைக் கொடுத்து தங்களின் வலையில் சிக்க வைக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. உஷார்! சமீபத்திய ஆய்வின் முடிவு இதுதான் பயனர்களைப் பாதிக்கக்கூடும் இந்த 9 பாதிக்கப்பட்ட பயன்பாடுகள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டுள்ளன,


 ஆனால் பிற போலி பயன்பாடுகள் மூலம் இந்த போலி நிறுவனங்கள் தாக்குதலை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான், தைவான், அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தான் போலி மால்வேர் அப்ஸ்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,