நீயும் உன் விருதும் நீயே வச்சுக்க
சினிமா துறையில் பிரபலமான Behind woods எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தென்னிந்திய அளவில் பெரும் சினிமா விருது நிகழ்ச்சியை நடத்தி. அந்த நிறுவனம் சேரனுக்கு ‘ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்” என்ற விருதை வழங்கியிருந்தது.
சமீபத்தில் சேரன் நடித்து ‘ராஜாவுக்கு செக்’ படம் வெளியானது. இந்த படத்துக்கு அந்த நிறுவனம் தங்கள் வலைதளத்தில் விமர்சனம் எதுவும் எழுதவில்லை. இதுகுறித்து சேரன் கேட்டபோது அந்த படத்தில் அவர்களின் விமர்சன குழுவுக்கு உடன்பாடு இல்லை அதனால் எழுதவில்லை என கூறினார்களாம். இதில் கோபமடைந்த சேரன் என் படத்தில் அப்படி என்ன குறை கண்டீர்கள் உங்கள் விருது எனக்கு வேண்டாம் என திரும்ப கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அவர் ” தாங்கள் கொடுத்த மெடலை அனுப்பியுள்ளேன். மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்.. சூழ்ச்சியிலே இறையாகும் பறவையல்ல சூட்டிற்குள்ளிருந்து பிறந்துவந்த பறவை.. விமர்சனங்கள் செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம்.. என்னை வீழ்த்தமுடியாது..” என்று கூறியுள்ளார்.
Comments