இவரை தெரிந்து கொள்ளுங்கள் பல் கலை வித்தகர் திரு ராஜகவி ராகில்
இவரை தெரிந்து கொள்ளுங்கள்
பல் கலை வித்தகர் திரு ராஜகவி ராகில்
இலங்கையில் கிழக்கில் நிந்தவூரில் பிறந்த இவர் ,
கவிதை , சிறுகதை, நாவல், பாடல் ,திரைப்படப் பாடல், பயணக் கட்டுரை
ஆய்வுக் கட்டுரை என பல துறைகளில் வித்தகர் எனலாம்
,இவரது பன் முகங்கள்
* இலங்கை ஒ கூ சிரேஸ்ட அறிவிப்பாளர் & நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
* பட்டதாரி ஆசிரியர்
* ஸ்ரீ லங்கா ஆர் கே மீடியா பணிப்பாளர் ( ஊடக செயற்பாடும் அது சார்ந்த பணிகளுக்குமான அமைப்பு )
* தோழன் கலை இலக்கிய சஞ்சிகை ஆசிரியர்
*அல் இன்ஷிரா சஞ்சிகை ஆசிரியர் பேராதானைப் பல்கலைக்கழக வெளியீடு
* இடி பத்திரிகை உதவி ஆசிரியர்
* கிழக்கு மண் பத்திரிகை உதவி ஆசிரியர்
எழுத்துபயணம்
-இவர் எழுதிய நூல்கள்
- இன்னுமொரு சுவாசம் அரச விருது கிடைத்த சிறுகதை நூல்
- உன்னிடம் விரல்கள் கேட்கிறேன் கவிதை நூல்
- என் உயிரும் உன் முகவரியும் தொடர் கவிதை நூல்
- உன் கண்ணால் தொடுகிறேன் கவிதை நூல்
- சின்னச் சித்திரங்களில் சூரியன் ஹைக்கூ கவிதை நூல்
- நீ கேட்ட கவிதை வானொலியில் நான் வாசித்த எனது கவிதைகள் நூல்
- மனவனத்தில் நந்தவனம் தொகுப்புக் கவிதை நூல்
- அன்புடன் பூங்காற்றுக்கு தொகுப்புக் கவிதைகள் நான் தொகுத்து வழங்கிய ஒலிமஞ்சரி நிகழ்ச்சியில் இடம் பெற்ற நேயர்களின் கவிதைகள் நூல்
- பள்ளத்தாக்கில் சிகரம் கவிதை நூல்
- மொழி ஒளி தமிழ் மொழி பற்றிய தொடர் கவிதை நூல்
- சட்டைப் பைக்குள் சிறகு கவிதை நூல்
- உடைந்த மழையில் நனைந்த பட்டாம் பூச்சி உரை கவிதைத் தொடர் நூல்
- சிலந்தி பின்னிய பட்டு வலையில் சிக்கிய விண்மீன்கள் ஹைக்கூ க்கவிதைகள் நூல்
- யாழ் மீட்டிய கண்கள் பயண அனுபவக் கட்டுரை நூல்
- மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு நாவல்
- தேவதையின் அந்தப் புரத்தில் பட்டாம் பூச்சிக் குடியிருப்பு வர்ணக் கவிதை நூல்
- ஓவியனை வாசித்த புல்லாங்குழலில் வர்ண இசை இந்திய அரசாங்க விருது பெற்ற கவிதை நூல்
- நீ பலூன் கண்களால் ஊதுகிறேன் நான் கவிதைக் கதை நூல்
வானொலி பயணம்
- 1995 ஆம் ஆண்டிலிருந்து இவர் பணி புரிந்த
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவைகள்
* மலையக சேவை
* ஆசிய சேவை
* கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு
* வர்த்தக சேவை
* தென்றல் சேவை
* பிறை எப் எம்
பிற
* பலநூறு மேடை நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பளார்
* இந்திய இலங்கைக் கலை இலக்கியவாதிகள் 1000 க்கும் மேல் நேர்காணல் இவற்றில் தென் இந்திய தமிழ் சினிமாத் துறையினர் 100 க்கும் மேற் பட்டோரை நேர்காணல் செய்துள்ளது குறிப்பிட தக்கது
* இ ஒ கூ பிராந்திய சேவையான பிறை எப் எம் சிரேஸ்ட அறிவிப்பாளர்
* வானொலியில்1000 க்கும் மேற்பட்ட விளம்பர நிகழ்ச்சிகளைத் தொகுப்பாளர்
* இவரே தனது கவிதைகளை வாசித்து ஒலிப்பதிவு செய்து பல ஒலிப்பேழைகள் வெளியீடு செய்துள்ளார்
* இ ஒ கூ தென்றல் சேவையில் கலை இலக்கிய நிகழ்ச்சியான வாலிப வட்டம் நிகழ்ச்சியினை 6 வருடங்களாகத் தயாரித்தும் தொகுத்து வழங்கியுள்ளார்
* வானொலிக்குப் பல நாடகங்கள் எழுதியுள்ளார்
இவரை நேர்காணல் செய்துள்ள ஊடகங்கள்
* நேத்ரா தொலைக்காட்சி பலமுறை
* வசந்தம் தொலைக் காட்சி பலமுறை
* உதயம் தொலைக்காட்சி
* தாருல் சபா தொலைக்காட்சி
* தென்றல் சேவை
* மலையக சேவை
* கனேடியன் ரேடியோ
* லண்டன் தமிழ் வானொலி
* பிறை எப் எம் பலமுறை
* கனடா உதயன் பத்திரிகை
* தினகரன் வார மஞ்சரி
* தினக்குரல் வார வெளியீடு
* சுடர் ஒளி
* உதயன்
* தமிழ் நெஞ்சம் பிரான்ஸ்
* இனிய நந்தவனம்
* மித்திரன் வார மலர்
திரைப்பயணம்
மீண்டும் அம்மன் திரைப்படம் மூலம் இவர் சினிமா என்ற பிரமாண்டமான திரை உலகத்தில் தமிழ் தெலுங்கு மலையாளத் திரைப்பட இயக்குநர் , தயாரிப்பாளர் , வசனகர்த்தா , திரைப்பட விநியோகஸ்தர் ஏ ஆர்கே ராஜராஜா அவர்களின் கண்டு பிடிப்பில் நுழைந்தார் .
இவர் சினிமாவுக்கு எழுதிய ' வினை தீர்க்கும் நாயகியே ' என்ற முதற்பாடலே மிகப்பெரிய வெற்றி பெற்றது . திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளிக் குவித்தது
மீண்டும் அம்மன் திரைப்படம் சன் தொலைக்காட்சி குழுமம் வாங்கி வெளியிட்டதுடன் பல தடவைகளுக்கு மேல் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது
இவரது பாடல் இன்றுவரை சன் தொலைக்காட்சி உட்பட இந்திய தொலைக்காட்சிகளில் இப்பொழுதும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது .
இதனைத் தொடர்ந்து சாதனைப் பெண் பழம் பெரும் நடிகை ராதிகா இயக்கிய கூட்ஸ் வண்டியிலே திரைப்படத்தில்' இந்தப் பொண்ணு மனச இந்தப் பொண்ணு வயச ' என்ற பாடலை எழுதினார் இப்பாடலை இவரது மகள் பாடினார்
இடையில் பல படங்கங்களுக்குப் பாடல்கள் எழுதி இவர் ஏ ஆர்கே ராஜராஜா இயக்கிய யாவும் காதலே திரைப்படத்திற்கும் ,சுப தமிழ் வாணன் இயக்கிய போலீஸ் தேடுது திரைப்படத்திற்கும் பாடல்கள் எழுதினார் .
இயக்குநர் ஆனைவாரி ஸ்ரீதர் வேடப்பன் , சோக்குச் சுந்தரம் உடப்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் . அவருடைய கோமுகி திரைப்படத்திற்கும் பாடல் எழுயுள்ளார்.
பொய்யாட்டம் எ ன்றதிரைப்படம் சென்ற மாதம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது ,.பொய்யாட்டம் திரைப்படம் சுதீப் , அமலாபால்
உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் .
பொய்யாட்டம் திரைப்படமும் அதில் இவர் எழுதிய பாடலும் வெற்றி பெற்று
ஆயிரக்கணக்கில் இணையதளத்தில் ரசிக்க பெற்று வருகிறது.
பொள்ளாச்சி சசி இயக்கத்தில் இயக்குநர் வெண்ணிலா ரவிக்குமார் தயாரிக்கும். இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ள சந்திரிகா திரைப்படத்திற்கும் ஒரு பாடல் எழுதியுள்ளார்
அதேபோல இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள கங்கணம் என்ற திரைப்படத்திற்கு ஒரு பாடல் எழுதியுள்ளார்.
விருதுகள்
சன் குழும வெளியீடான சினிமா இதழ் வண்ணத்திரை பாட்டுச் சாலை என்ற பக்கத்தில் என்னைப் பற்றிச் சிறப்பாக எழுதியது
பின்னர் திரைப்படப் பாடலாசிரியர்கள் 100 பேரைப் பற்றி பாட்டுச் சாலை என்ற தலைப்பில் கண்ணதாசன் தொடக்கம் ராஜகவி ராகில் வரை நூல் வெளியீடு செய்தது . இந்நூலை வண்ணத்திரை ஆசிரியர் கவிஞர் நெல்லை பாரதி தொகுக்க சினிமா உலகம் ஒன்று சேர வெளியிட்டது
தமிழ் மலையாளம் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பலப்பல சாதனைகள் நிகழ்த்திவரும் இயக்குநர் ஏ ஆர்கே ராஜராஜா அவர்களும் நானும் ஒரு நாள் ஓர் இரவு முழுவதும் அமர்ந்து நான் பல பல்லவிகளையும் சரணங்களையும் எழுதிக் குவிக்க எனக்குள் உள்ள அதி உச்ச வரிகள் கொண்ட பாடலை வரவழைத்தார்
மீண்டும் அம்மன் திரைப்படத்திற்கு ஸ்ரூடியோவில் வைத்து திரைத்துறை சூழ ' தமிழ் நயாகரா ' என்ற பட்டம் வழங்கப்பட்டது
பிற விருதுகள்
* சுவதம் விருது பல்துறைக்கான அரசாங்க விருது
* ராஜகவி
* சூப்பர் டொப் 10 தங்கக் கோப்பை விருது
* வாழ் நாள் சாதனையாளருக்கான அரசாங்க விருது பிரசாதினி பிரதீப
* சந்தப்பா வேந்தர் ,* சாமஸ்ரீ ,* ரத்ன தீப ,* தமிழ் மணி ,* கவித்தாமரை
* கவிக் கனல் ,* கவிச் சுடர் ,* பல்துறை வேந்தர் ,* வர்ணனைக் கவிஞர்
* தமிழ்ச் செம்மல் விருது ,* தமிழ் நயாகரா விருது ,* விருதுகளின் சக்கரவர்த்தி
* வாழும் கவி அரசர் ,* பாட்டுத் திலகம்,* கவி வாணன் விருது
* இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிலாமுற்றம் என்ற கலை இலக்கிய அமைப்பு சர்வதேச ரீதியில் பல மாதங்களாகத் தொடர்ச்சியாக நடத்திய பாடல் எழுதும் 10 போட்டிகளிலும் முதல் இடம் பெற்று சூப்பர் டொப் 10 என்ற தங்கக் கோப்பையினையும் விருதினையும் பெற்றுள்ளார்
-
* இவரது ஊரான நிந்தவூரைப் பற்றி நிந்தவூர் மான்மீயம் என்ற தலைப்பில் இவரே பாடல் எழுதி இயக்கி நடித்தும் வெளியிட்டுள்ளார்
விருதுகளே பொறாமைப்படும் அளவுக்கு விருதுகளை பெற்ற இவரின் தமிழ் ஆர்வம் நம்மை பிரமிக்க வைக்கிறது
மிகவும் எளிய மனிதராக உள்ள இவர் பழகுவதற்கு இனியவர்
இவர் மேலும் பல தமிழ்தொண்டு செய்யவும் தான் விரும்பும் துறைகளில் சாதனை செய்யவும் பீப்பிள் டுடேவின் வாழ்த்துகள்
----உமாதமிழ்
இவரை கீழ்கண்ட மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம் : rajakavirahil@gmail.com
Comments