திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் வரம்பியம் ஊராட்சியில் குளங்களை தூர்வார வேண்டும்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் வரம்பியம் ஊராட்சியில் குளங்களை தூர்வார வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கியமேரி கோரிக்கை விடுத்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் ஊராட்சியில் மரத்துக்குளம் ,கொத்தரங்குட்டைகுளங்கள் உள்ளது. இதில் ஆகாய தாமரைகள் முழுவதுமாக மண்டிக்கிடக்கிறது இதனால் இந்த குளங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை தற்போது கோடைகாலம் துவங்கியுள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரைகளை சுத்தம் செய்து கொடுத்தால் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும் உடனடியாக ஒன்றிய அதிகாரிகள் குளங்களை சுத்தம் செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கியமேரி கோரிக்கை விடுத்துள்ளார்.


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்