கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் எஸ்.கே.வேல் தலைமை தாங்கினார். பொருளாளர் பாலசுப்ரமணியன், புதுச்சேரி வக்கீல்கள் சங்க தலைவர் முத்துவேல், செயலாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கூட்டமைப்பின் செயலாளர் ராஜி, இணை செயலாளர் வேலவன் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள், வக்கீல் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகள் வக்கீல் தொழிலுக்கு மிகவும் பாதகமாக உள்ளது. எனவே அந்த விதிகளை ஐகோர்ட்டும், தமிழக அரசும் மாற்ற வேண்டும். தமிழ்நாடு வக்கீல்களுக்கான சேமநல நிதியை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய உத்தரவிடும் அதிகாரத்தை மீண்டும் கீழமை நீதிமன்றங்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் தமிழகம்-புதுவையில் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது.

 

மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை