வெள்ளரிக்காய் மோர் குழம்பு--- சுவையான சமையல்-

 


சுவையான சமையல்


வெள்ளரிக்காய் மோர் குழம்பு 


 


வெள்ளரிக்காய் மோர் குழம்பு(mor kulumbu) செய்ய தேவையான பொருட்கள் :


1) தயிர் – 1 கப் (கெட்டியானது)
2) தேங்காய் – 1/2 கப் (துருவியது)
3) பச்சை மிளகாய் – 3
4) கடலை பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன் (20 நிமிடம் நன்கு ஊற வைத்தது)
5) சீரகம் – 1/2 ஸ்பூன்
6) சின்ன வெங்காயம் – 2
7) இஞ்சி – 1 துண்டு (சிறியது)
8) மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
9) வெள்ளரிக்காய் – தே. அளவு
10) உப்பு – தே. அளவு


வெள்ளரிக்காய் மோர் குழம்பு  செய்முறை :


முதலில் ஒரு கடாயில் வெட்டி வைத்த வெள்ளரிக்காய்களை தண்ணீரில் நன்கு வேக வைக்க வேண்டும் .


வேக வைக்கும் நேரத்தில் நாம் அரைக்க வைத்துள்ள பொருட்களான தேங்காய் துருவியது , பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி துண்டு, ஊறவைத்த கடலை பருப்பு , சீரகம் ஆகியவற்றை சிறிது நீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு வெள்ளரிக்காய் நன்கு வேகவைத்தவுடன் அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணுங்க
அதனுடன் அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து ஒரு கொதி விடுங்க.


இது கொஞ்சம் ஆறிய பிறகு நாம் அதில் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.


இதன் பிறகு இன்னொரு கடாயில் தாளிக்க வைத்துள்ள பொருட்களான காய்ந்த மிளகாய், கடுகு, கருவேப்பிலை, பெருங்காயப் பவுடர் ,
உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தாளித்துக் கொள்ளவும்.


வேகவைத்த வெள்ளரிக்காய், தேங்காய் கலவையுடன் நன்கு கடைந்த மோர் சேர்க்கவும் . இதனுடன் தாளித்து வைத்துள்ள அனைத்தும் சேர்ந்து நன்கு கலக்கவும். இப்போது வெள்ளரிக்காய் மோர் குழம்பு (mor kulumbu) தயார்.


பேபி சம்பந்தன்


Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்