சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜெயஸ்ரீக்கு முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கொளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கே.வி. ஜெயஸ்ரீ. எழுத்தாளர் மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை மொழிபெயர்த்து தமிழில் எழுதியுள்ளார்.  இதற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜெயஸ்ரீக்கு முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


தமிழில் சங்ககால இலங்கியங்களில் இடம்பெற்றிருந்த சங்ககால பாணர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையை பற்றி விவரிக்கும் வகையில் நாவல் அமைந்துள்ளது.

 

சாகித்ய அகாடமி விருது பெற்றதுபற்றி ஜெயஸ்ரீ கூறும்பொழுது, சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  மொழிபெயர்ப்பு நாவல்களில் தனி கவனம் செலுத்தி வருகிறேன்.  கடந்த 20 வருடங்களாக மொழி பெயர்ப்பு பணியில் ஈடுபட்டு உள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.  இவரது மகள் சுகானாவும் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,