இவரைத்தெரிந்து கொள்ளுங்கள் பேராசிரியர்  கவிஞர் முனைவர் ரத்னமாலா

இவரைத்தெரிந்து கொள்ளுங்கள்


பேராசிரியர்  கவிஞர் முனைவர் M.ரத்னமாலா


 


பேராசிரியர்  கவிஞர் முனைவர் M.ரத்னமாலா  அவர்கள் கணிதத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப்  பட்டங்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும், எம் பி ஏ மற்றும் எம்.பில் பட்டங்களை மதுரை காமராஜர்   பல்கலைக்கழகத்திலும் பெற்றவர்.இவர் MBA  பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். சென்னை   அண்ணா பல்கலைக்கழகத்தில் மனித வள மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் UGC-NETலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில்  MBA துறை பேராசிரியராக பணியாற்றிவரும்   இவர் All India Radio, நாகர்கோயில் வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.


இவருடைய முதல் கவிதை நூல் ரத்னமாலா கவிதைகள்  என்ற தலைப்பில் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவருடைய இரண்டாவது கவிதை நூல் காய்ந்த மண் ஈரமாயிற்று என்ற தலைப்பில் மணிமேகலைப் பிரசுரத்தாரால் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு 'சிறந்த கவிதை நூல்' என்னும் விருதை அமெரிக்காவிலுள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அளித்து கௌரவித்துள்ளது. அரிய தகவல்களைக் கொண்ட இவருடைய மூன்றாவது நூல் 'ஒரு நிமிடம் ஒரு  தகவல்' என்ற பெயரில் மணிமேகலைப் பிரசுரத்தாரால் 2017ம் ஆண்டு இலங்கையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது. இவர் எழுதிய  'வானவில் வாழ்வில் வண்ணங்கள் தீட்டுவோம்' என்னும் வாழ்வியல் நூல் மணிமேகலைப் பிரசுரத்தாரால் 2018ம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் மிகச் சிறப்பாக வெளியிடப்பட்டது. இவருடைய ஐந்தாவது படைப்பான 'நட்சத்திர பூக்கள்' என்னும் ஹைக்கூ கவிதை நூல் ஜனவரி 2019 சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. மேலும் திருக்குறளுக்கு எளிய கவிதை வடிவில் விளக்கவுரை 'குறளமுது' என்னும் நூல்  எழுதியுள்ளார்.  இவரது ஆறாவது படைப்பான  இந்நூல்  இந்த ஆண்டு நடைபெற்ற சென்னை புத்தகத் திருவிழாவில் சிறப்பாக வெளியிடப்பட்டது.


 




 


மேலும் இவர் 'ஒரு நிமிடம் ஒரு  தகவல்' என்ற தலைப்பில் வரலாற்று நிகழ்வுகள், பொது  அறிவு, உலகத்தலைவர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து குறுந்தகவல்களாக ஒரு நிமிடத்தில் தன் குரலில் பேசி ஒலி-ஒளிப்பதிவுகளாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.


 இவர் 'ராணி' வார இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.மேலும் இவர் மாண்புமிகு பாரதப் பிரதமர்,  மாண்புமிகு தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். 


தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் ஆன்மிகச்  சொற்பொழிவு நிகழ்த்தி இருக்கிறார்.   தன் பேச்சுத் திறமையால் பல்வேறு மேடைகளை அலங்கரித்து வரும் இவர் கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் எனத் தன் இலக்கியப் பணியைத் தொடர்ந்து வருகிறார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்து வருகிறது. 


குமரி மாவட்ட பெண் சாதனையாளர், சக்தி, கலாம், கவித்திலகம்,பாரதி கண்ட புதுமை பெண்,  போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர் "சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்" என்று மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளார். 


இவர் அமர்ஜோதி கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை என்னும் சேவை அமைப்பினை உருவாக்கி ஏழை எளிய மக்களுக்கு உணவு, படிப்பு மற்றும் மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்.


இவரை தொடர்பு கொள்ள



இவருடைய ஒரு நிமிஷம் ஒரு தகவல் ஒரு sample video



 


நீங்க அவருடைய you tube channel subscribe செய்தால் அவருடைய videos email மூலமாக லிங்க் பெற்று காணலாம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,