நீயா நானா

டெலிகிராம் உருவாக்கப்பட்டதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு வந்து தனக்கென நிலையான ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது.


     மெஸேஜிங் செயலிகள் எத்தனை இருந்தாலும், அவற்றில் ராஜாவாக இருப்பது வாட்ஸ்அப்தான். வாட்ஸ்அப்பிற்கு மாற்று நாங்கள்தான் என நிறைய செயலிகள் இருந்தாலும், பெரிதாகப் பயனர்கள் மத்தியில் அவற்றிற்கு வரவேற்பு இல்லை. சமீபத்தில் அமேசானின் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பஸாஸின் வாட்ஸ்அப்பை சவுதி இளவரசர் ஹேக் செய்ததாகச் செய்தி வந்தது. ஜெஃப் டெலிகிராமைப் பயன்படுத்தியிருந்தால் அவரது கணக்கை ஹேக் செய்திருக்க முடியாது. வாட்ஸ்அப் எளிதாக ஹேக் செய்யும் வண்ணம் `பக்'குகளால் நிறைந்துள்ளது என டெலிகிராம் நிறுவனர் பவல் துரவ் (Pavel Durov) நேரடியாகவே வாட்ஸ்அப்பைக் குற்றம் சாட்டியுள்ளார். வாட்ஸ்அப்பை ஹேக் செய்வது எளிதல்ல, ஆப்பிளின் இயங்குதளத்தில் உள்ள குறைபாட்டினால்தான் பஸாஸின் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


டெலிகிராம்தான் வாட்ஸ்அப்பிற்கு நேரடி போட்டியாகப் பார்க்கப்படுகிறது. மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் டெலிகிராம் ஒரு இந்தியப் படைப்பு என்று எண்ணி பயன்படுத்தியவர்களும் அதிகம்


 


. சரி வாட்ஸ்இப் vs டெலிகிராம் இரண்டில் எது சிறந்த செயலி?


 


 


டெலிகிராம் 2013-ல் ரஷ்யாவைச் சேர்ந்த பவல் துரவ் என்பவரால் உருவாக்கப்பட்டது. வாட்ஸ்அப்பிற்கு மாற்றாகச் சீனாவுக்கென சொந்தமாக உருவாக்கப்பட்ட செயலிதான் `வீ சாட்' (We Chat). அது போல வாட்ஸ்அப்பிற்குப் போட்டியாக ரஷ்யாவுக்கென்று உருவாக்கப்பட்ட செயலிதான் டெலிகிராம். வாட்ஸ்அப்-உடன் ஒப்பிடும் போது வாட்ஸ்அப்பிலுள்ள மற்றும் அதற்கு மேலும் பல சிறப்பம்சங்கள் டெலிகிராமில் உண்டு. விரைவாகச் செய்திகள் அனுப்புவது, டார்க் மோடு என வாட்ஸ்அப் தற்போது பரிசோதனையில் வைத்திருக்கும் நிறைய வசதிகளை டெலிகிராம் பயன்பாட்டிற்கே கொண்டு வந்து விட்டது. வாட்ஸ்அப்பில் 16 MB அளவுக்குள் இருக்கும் வீடியோக்களை மட்டும்தான் அனுப்ப முடியும். டெலிகிராமில் 1.5 GB வரை அளவுள்ள வீடியோக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.


வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள், படங்கள் மற்றும் கோப்புகள் எல்லாவற்றையும் நம்முடைய மொபைல் அல்லது மின்னஞ்சல் ட்ரைவில் மட்டும்தான் சேமித்து வைக்க முடியும். டெலிகிராம் கிளவுட் (Cloud) முறையைப் பயன்படுத்துவதால் நமது தகவல்கள் யாவும் இணையத்தில் சேமிக்கப்படும். நமக்குத் தேவைப்படும் போது அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை எளிதாக நீக்கவும், திருத்தவும் முடியும். வாட்ஸ்அப்புடன் ஒப்பிடும் போது டெலிகிராமின் சேவைகள் பல படிகள் மேலேதான் உள்ளன.


 


பயன்பாடு என்று வரும்போது உலகளவில் வாட்ஸ்அப்பையே பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள். 1.5 பில்லியன் பயனர்களுடன் மெஸேஜிங் தளத்தில் வாட்ஸ்அப்தான் முதல் இடத்தில் உள்ளது. உலகளவில் டெலிகிராமைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 365 மில்லியன்தான்.


 தற்போது டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் என இரு செயலியையும் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். டெலிகிராமில் 1.5 GB அளவிற்கு வீடியோக்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்பதாலும் அது க்ளவுட் சேவையில் இயங்குகிறது என்பதாலும் புதிய படங்கள் சட்டத்திற்குப் புறம்பாக டெலிகிராமில் கிடைக்கின்றன. எந்தத் தடையுமின்றி இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம் என்பதாலும் பலர் டெலிகிராமை உபயோகப்படுத்துகிறார்கள். அது சட்டப்படி தவறு.


 


டெலிகிராம் உருவாக்கப்பட்டதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு வந்து தனக்கென நிலையான ஒரு இடத்தைப் பிடித்தவிட்டது. அத்துடன் தனியாக சாட்டிங்கிற்கு மொபைல் எண்ணைப் பயன்படுத்திய வகையில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட செயலி வாட்ஸ்அப்தான் என்பதால் அதன் பிறகு வந்த செயலிகள் அனைத்தும் இதன் காப்பியாகத்தான் பார்க்கப்பட்டன. எனவேதான் மற்ற செயலிகளால் வாட்ஸ்அப்பின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,