முத்துப்பேட்டையில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


 நாடுமுழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் குடியுரிமை சட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் சி ஏ ஏ, என் ஆர் சி ,என் பி ஆர் க்கு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். தமிழக அரசு இதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


செய்தியாளர் பாலா திருத்துறைப்பூண்டி.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்