திருத்துறைப்பூண்டியில் முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கம்

திருத்துறைப்பூண்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் ஓன்றிய பகுதிகளில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் துவக்கிவைத்தார்.



குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், என பல வகைகளில் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டமன்றங்களில் தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளன.  இந்நிலையில் தமிழகத்திலும் சி ஏஏ வை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் சார்பில் முதற்கட்டமாக பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இப்போது இரண்டாம் கட்டமாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.


இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது என திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் குடியுரிமை திருத்த சட்டத்தை(CAA)  திரும்ப பெற வேண்டும் எனவும், தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC), தேசிய குடியுரிமை பதிவேடு  தயாரிக்கும் எந்த முயற்சியையும் மேற்கொள்ள கூடாது என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் ஓன்றிய பகுதிகளில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் துவக்கிவைத்தார்.


 பொதுமக்களிடம் அனைத்து மக்களை பாதிக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை அனுமதிக்கக் கூடாது என்ற வாசகங்கள் எழுதப்பட்ட விண்ணப்பங்களில் கையெழுத்து பெறப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் தங்களுடைய பெயர் மற்றும் கையெழுத்தை பதிவு செய்தனர். 


இந்நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி திமுக நகர செயலாளர் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.:


பாலா


திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி