யாராவது கேட்டை திறந்து வாசலில் நின்று பேட்டி அளித்தால் அது தலைப்புச் செய்தி

ரஜினிகாந்த் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளித்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ., குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடி வரும் மாணவர்கள் குறித்து,  ‘’சுய லாபத்திற்காக அரசியல் கட்சிகள் தூண்டிவிடும்.  தீர ஆராய்ந்து, பேராசிரியர்கள், பெரியவர்களிடம் கலந்து பேசி முடிவெடுத்து போராட்டத்தில் இறங்குங்கள்’’ என்று கூறினார்.  ரஜினிகாந்த் அளித்த பேட்டி ஊடகங்களில் பரபரப்பாக ஒளிபரப்பானது.  தலைப்புச்செய்தியாக செய்தித்தாள்களில் வந்தன.


 


இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  ‘’யாராவது கேட்டை திறந்து வாசலில் நின்று பேட்டி அளித்தால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  தலைப்புச் செய்தியாக வருகிறது. உண்மைச் செய்திகள் மறைக்கப்படுகிறது’’என்று கூறி, ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,