வரதட்சணை கொடுமைக்கான விழிப்புணர்வு
பெண்களின் வரதட்சணை கொடுமைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
மணலி பிப்ரவரி 12ம் தேதி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக்கல்லூரி தண்டலைச்சேரி இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நடத்தும் பெண்களின் வரதட்சணை கொடுமைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மணலி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது வரவேற்புரை லட்சுமி பிரபா பி வைத்தீஸ்வரி. இந்நிகழ்ச்சிக்கு மணலி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. N. குணசேகரன் அவர்கள் தலைமை வகித்து தொடங்கி வைத்தார் M C முருகேசன் ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை வகித்தார் இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் திரு இ. பழனி அவர்கள் சிறப்பு விருந்தினராக மற்றும் PTA தலைவர் ஆதி சிவகுமார் மற்றும் திரு மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் சமூகப்பணி துறை உதவி பேராசிரியர் ராஜகுமாரி மற்றும் S. N. ப்ரீத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு சமூகப்பணி மூன்றாமாண்டு மாணவி பிரசன்னா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் சமூகப்பணி மூன்றாம் ஆண்டு மாணவிகள் பெண்களின் வரதட்சணை கொடுமைகளை நாடகமாக நடித்துகாட்டினர் இறுதியில் சமூக பணித்துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் முத்தழகி அகிலா, ஆகியோர் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments