குடியுரிமை திருத்த சட்டம்  எந்த இந்தியனையும் பாதிக்காது,

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து  பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் பேசும் போது   குடியுரிமைச் சட்டம்   தொடர்பாக சிறுபான்மையினருக்கு பாகுபாடு காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை  மறுத்தார்.   காங்கிரஸ் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். ஜவஹர்லால் நேரு, பிரிவினை, 1975 அவசரநிலை மற்றும் 1984 சீக்கிய எதிர்ப்பு கலவரங்கள் குறித்து குறிப்பிட்டார்.


 


 


              குடியுரிமை சட்டம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்புக்களைத் தூண்டி வருகின்றன. குடியுரிமை (திருத்த) சட்டம் எந்த இந்திய குடிமகனையும் பாதிக்காது அல்லது சிறுபான்மை நலன்களுக்கும்  தீங்கு விளைவிக்காது.இந்திய மக்களால் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இப்போது நினைத்துப்பார்க்க முடியாததைச் செய்கிறார்கள். அவர்கள் குடிமக்களை மதத்தின்  அடிப்படையில் பார்க்கிறார்கள். நாங்கள் வேறுபட்டவர்கள். அனைவரையும் நாங்கள் இந்தியர்களாகவே பார்க்கிறோம். "


 


இஸ்லாமியர்கள் எதிர்க்கட்சிகளுக்கு இஸ்லாமியராக தெரிந்தாலும் எங்களுக்கு இந்தியர்களே.


 


இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற ஒருவரின் விருப்பத்திற்கு, வரைபடத்தில் ஒரு கோடு வரையப்பட்டு இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு, இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள் என்பது கற்பனைக்கு எட்டாதது.


 


குடியுரிமை திருத்த சட்டம் வருவதால், எந்தவொரு நம்பிக்கையுள்ள இந்திய குடிமகனுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். குடியுரிமை திருத்த சட்டம்  எந்த இந்தியனையும் பாதிக்காது, சிறுபான்மை நலன்களுக்கு தீங்கு விளைவிக்காது என கூறினார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,